உள்ளூர் செய்திகள்
அனுமன் ஜெயந்தி வழிபாடு - பக்தர்கள் குவிந்தனர்
- ஆஞ்சநேயருக்கு வெண்ணை- சந்தனக் காப்பு ,மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.
- ஸ்ரீராமபஜனைமடம் அனுமந்தராயசுவாமி கோவில்களில் நடைபெற்ற வழிபாட்டில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
திருப்பூர் :
அனுமன் ஜெயந்தியையொட்டி திருப்பூரில் உள்ள ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. பழங்கள் - வாசனை திரவியங்களால் அபிஷேகங்கள் செய்யப்பட்டு 108 வடமாலை சாற்றப்பட்டது.மேலும் ஆஞ்சநேயருக்கு வெண்ணை- சந்தனக் காப்பு ,மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.
திருப்பூர் வாலிபாளையம் கல்யாணசுப்பிரமணியர் கோவிலில் உள்ள ஆஞ்சநேயருக்கு மெகா சைஸ் லட்டு படைக்கப்பட்டது. ஆலாங்காடு சித்தி விநாயகர் கோவில், திருப்பூர் வீரராகவப்பெருமாள் கோவில், மானூர் அனுமந்தராயசுவாமி கோவில், கோர்ட் வீதி, ஸ்ரீராமபஜனைமடம் அனுமந்தராயசுவாமி கோவில்களில் நடைபெற்ற வழிபாட்டில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். இன்று அதிகாலை முதலே பக்தர்கள் கோவில்களுக்கு சென்று நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.