உள்ளூர் செய்திகள்

ஓசூரில் உலக நன்மைக்காகவும்,விவசாயம் செழிக்கவும் வேண்டி அனுமார் மீது கடலைக்காய் வீசி, பக்தர்கள் நூதன வழிபாடு நடத்திய காட்சி.

அனுமன் மீது கடலைக்காய் வீசி நூதன வழிபாடு

Published On 2023-01-02 09:50 GMT   |   Update On 2023-01-02 09:50 GMT
  • ஆங்கில புத்தாண்டு முதல் நாளன்று கடலைக்காய் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
  • உலக நன்மைக்காகவும், விவசாயம் செழிக்கவும் வேண்டிக்கொண்டனர்.

ஓசூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர்-ராயக்கோட்டை சாலையில் ராஜகணபதி நகரில் ஸ்ரீ ராஜகணபதி ஸ்ரீ வரசித்தி ஆஞ்சநேயசாமி கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஆங்கில புத்தாண்டு முதல் நாளன்று கடலைக்காய் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

அந்த வகையில், 65-ஆம் ஆண்டு கடலைக்காய் திருவிழா நேற்று நடைபெற்றது. விழாவையொட்டி முன்னதாக சிறப்பு ஹோமங்களும், சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடத்தப்பட்டது.

பின்னர், சாமி முன்பு குவித்து வைக்கப்பட்டிருந்த கடலைக்காய் குவியலுக்கு பூஜைகள் நடத்தி மகாதீபாராதனை செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அங்கு திரண்டிருந்த பக்தர்கள் கடலைக்காயை ஆஞ்சநேயர் மீது வீசி, நூதன வழிபாடு நடத்தி உலக நன்மைக்காகவும், விவசாயம் செழிக்கவும் வேண்டிக்கொண்டனர்.

விழாவை முன்னிட்டு, சாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மேலும் பொதுமக்களுக்கு அன்ன தானம் வழங்கப்பட்டது.

விழாவில் கோவில் நிர்வாகிகள் கிருஷ்ணமூர்த்தி, முனிசந்திரா, ஜெய்சங்கர், மாமன்ற உறுப்பினர் குபேரன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News