உள்ளூர் செய்திகள்

கல்லணை அணைப்பகுதியில் ஆய்வு செய்த கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர்.

கல்லணை அணைப்பகுதியில் மதி விற்பனை அங்காடி- கலெக்டர் தொடங்கி வைத்தார்

Published On 2022-08-03 10:02 GMT   |   Update On 2022-08-03 10:02 GMT
  • இதன் மூலம் 125 குழு உறுப்பினர்களும் நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலை வாய்ப்பினை பெற்று வருகின்றனர்.
  • சுற்றுலா பயணிகள் எளிதில் பொருள்களை வாங்க ஏதுவாக கல்லணையில் ஒரு மதி விற்பனை அங்காடி அமைத்திட முடிவு செய்யப்பட்டது.

தஞ்சாவூர்:

தஞ்சாவூர் மாவட்டத்தில் மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் தயாரிக்கும் பொருட்களுக்கு சிறந்த ஒரு விற்பனை வாய்பினை ஏற்படுத்தி தரும் பொருட்டு தஞ்சை தாரகைகள் கைவினை பொருட்கள் அங்காடி என்ற சிறப்பு அடையாளத்தில் மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் அனைத்து மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களுக்கு கூடுதல் விற்பனை வாய்ப்பும் கூடுதல் வருவாயும் வேலை வாய்ப்பும் ஏற்படுத்தி தரும் வகையில் ஓர் இலக்குடன் உருவாக்கப்படுகிறது.

ஏற்கனவே தஞ்சாவூர் மாநகராட்சியில் பூ மாலை வணிக வளாகத்தில் தஞ்சை தாரகைகள் கைவினை பொருட்கள் மகளிர் சுய உதவிக்குழு விற்பனை அங்காடி தொடங்கப்பட்டது. இதன் மூலம் 35 மகளிர் சுயஉதவி குழுக்கள் உற்பத்தி பொருட்கள் விற்பனைக்கு இதன் மூலம் 125 குழு உறுப்பினர்களும் நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலை வாய்ப்பினை பெற்று வருகின்றனர்.

அதனை தொடர்ந்து தஞ்சாவூர் மாவட்டத்தில் புகழ்பெற்ற கல்லணை அணைப்பகுதியில் மகளிர் கய உதவிக்குழுவினர் தயார் செய்யும் உற்பத்தி பொருட்களை விற்பனை செய்திடவும், பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் எளிதில் பொருள்களை வாங்க ஏதுவாக கல்லணையில் ஒரு மதி விற்பனை அங்காடி அமைத்திட முடிவு செய்யப்பட்டது.

அந்த அங்காடியினை தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் இன்று மதியம் திறந்து வைத்தார்.

இந்த அங்காடியில் மகளிர் சுயஉதவிக்குழுக்களால் உற்பத்தி செய்யும் கைவினைப் பொருட்கள், தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகன், நடமாடும் பொம்மைகள், பொய்கால் குதிரைகள் கால் மிதியடி பொம்மை வகைகள் பைகள் மூங்கில் கூடைகள், பனைப்பொருட்கள், விளையாட்டு பொம்மைகள் உள்ளிட்ட பல வகையான பொருட்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன.

இந்திகழ்ச்சியில் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி), மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, மகளிர் திட்ட இயக்குநர்லோகேஸ்வரி, செயற்பொறியாளர், உதவி திட்ட அலுவலர்கள் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மகளிர் திட்ட களப்பணியார்கள், மகளிர் சுய உதவிக்கு உறுப்பினர்கள், மற்றும் பொதுமக்கள் கலந்துக்கொண்டனர்.

Tags:    

Similar News