உள்ளூர் செய்திகள்

தஞ்சையில், இன்று மீண்டும் கனமழை

Published On 2022-12-12 08:18 GMT   |   Update On 2022-12-12 08:18 GMT
  • மழை இன்றி வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு சில மணி நேரம் இந்த நிலை நீடித்தது.
  • நேரம் செல்ல செல்ல மழையின் அளவு அதிகரித்து சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

தஞ்சாவூர்:

தமிழகத்தில் கடந்த 10-ந் தேதி அதிகாலை மாண்டஸ் புயல் கரையை கடந்தது. இந்த புயலால் சென்னை, விழுப்புரம், காஞ்சிபுரம் உள்ளிட்ட வட மாவட்டங்களில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது.

தஞ்சை மாவட்டத்தில் மாண்டஸ் புயலால் கடந்த இரண்டு நாட்களாக குளிர்ந்த காற்று வீசி வந்தது. புயல் கரையை கடப்பதற்கு முந்தைய நாள் கடுமையான குளிர் காற்று வீசியது. ஆனால் போதிய மழை பெய்யவில்லை.

இந்த நிலையில் தஞ்சையில் இன்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காட்சியளித்தது. காலை 9 மணி அளவில் மிதமான மழை பெய்தது. சுமார் 40 நிமிடம் வரை மழை நீடித்தது. அதன் பின்னர் மழை இன்றி வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

சில மணி நேரம் இந்த நிலை நீடித்தது. இதனைத் தொடர்ந்து மதியம் 12.30 மணிக்கு மீண்டும் மழை பெய்ய தொடங்கியது. இம்முறை கனமழையாக கொட்டியது. நேரம் செல்ல செல்ல மழையின் அளவு அதிகரித்தது.

சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது. இன்று இரவிலும் மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேபோல் வல்லம், பூதலூர், பாபநாசம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் இன்று மழை பெய்தது.

Tags:    

Similar News