உள்ளூர் செய்திகள்
கூடலூரில் கனமழை : மைசூா் சாலையில் மூங்கில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
- சாலையின் இருபுறமும் கொட்டும் மழையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
- 2 இரண்டு மணி நேரத்துக்குப் பிறகு போக்குவரத்து சீரானது.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம், கூடலூா், பந்தலூா் ஆகிய பகுதிகளில் கடந்த 3 நாளாக தொடா்ந்து கன மழை பெய்துவருகிறது.
இதனால் கூடலூா்- மைசூா் ரோட்டில் உள்ள தொரப்பள்ளி பகுதியில் சாலையோரம் நின்ற மூங்கில் மரம் முறிந்து சாலையின் குறுக்கே விழுந்தது. இதனால் தமிழகம், கா்நாடகம், கேரளா இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சாலையின் இருபுறமும் கொட்டும் மழையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்புத் துறையினா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சாலையில் கிடந்த மூங்கில் தூா்களை பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றினா்.
இதனால் அங்கு 2 இரண்டு மணி நேரத்துக்குப் பிறகு போக்குவரத்து சீரானது. நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூா், கோத்தகிரி ஆகிய பகுதிகளில் விட்டுவிட்டு சாரல் மழை பெய்தது. இதனால் அங்கு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.