தஞ்சை மாவட்டத்தில் இரவு நேரங்களில் தொடரும் கனமழை
- தஞ்சை உள்பட மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் பரவலாக மழை பெய்தது.
- ஒரே நாளில் 114 மி.மீ. கனமழை பதிவானது.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களா கவே வெயில் சுட்டெரித்து வந்தது. பகல் நேரங்களில் தொடங்கும் வெப்பத்தின் தாக்கம் இரவிலும் நீடித்தது.
அக்னி நட்சத்திரம் முடிந்தும் வெயில் வாட்டி வதைத்தது.
இந்த நிலையில் கடந்த நான்கு நாட்களாகவே பகலில் வெயில் சுட்டெரித்தா லும் இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது.தஞ்சையில் நேற்று பகலில் வெயில் கொளுத்தியது.
மாலையில் குளிர்ந்த காற்று வீசத் தொடங்கியது.
பின்னர் இரவில் இடி மின்னலுடன் கனமழை கொட்டியது. தஞ்சை உள்பட மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் பரவலாக மழை பெய்தது.
மாவட்டத்தில் அதிகபட்சமாக குருங்கு ளத்தில் 24.70 மி.மீ. மழை பதிவானது.
இன்று காலை 8 மணியுடன் முடிவடைந்த மழையின் அளவு மி.மீ.யில் வருமாறு:-
குருங்குளம் -24.70,
பட்டுக்கோட்டை -16,
தஞ்சாவூர் -14,
அதிராம்பட்டினம் -13.70,
வெட்டிக்காடு -13,
திருக்காட்டுப்பள்ளி -9.
மாவட்டத்தில் ஒரே நாளில்
114.60 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது