சுவாமிமலையில் சூறாவளி காற்றுடன் கனமழை
- தஞ்சை உள்ளிட்ட பல இடங்களில் நேற்று திடீரென கன மழை பெய்தது.
- காற்று வீசியதால் வீட்டின் மேற்கூரை பறந்தது
சுவாமிமலை:
தஞ்சை, நாகை உள்ளிட்ட பல மாவட்டங்களில் நேற்று திடீரென கன மழை பெய்தது.
சுவாமிமலை சின்னக்கடை வீதியை சேர்ந்தவர் செல்வம் (வயது 60).
இவரது வீட்டின் முதல் மாடியில் கூலிங் சீட் மேற்கூரை போடப்பட்டிருந்தது இந்த நிலையில் கடுமையான காற்று வீசியதால் மேற்கூரை பறந்து அருகில் சின்னக்கடை வீதி பெரியசாலியர் தெரு ஆகிய சந்திப்புகளில் உள்ள மின்சார கம்பத்தில் சிக்கி தொங்கியது.மழையை முன்னிட்டு மின்சாரம் நிறுத்தப்பட்டதால்
பெரும் பாதிப்பும் உயிர் சேதமும் தவிர்க்கப்பட்டது. காலையில் தகவல் அறிந்து வந்த அதிகாரிகள் மேற்கூரை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
மேலும் சுவாமி மலை காவல் நிலையத்திற்கு அருகே உள்ள அரசுக்கு சொந்தமான இரண்டு புளிய மரங்கள் வேரோடு சாய்ந்து இருக்கின்றன.நேற்று பெய்த மழையால் விடிய விடிய மின்சாரம் தடைப்பட்டது ஆங்காங்கே சாலைகளில் சிறு மற்றும் பெரிய மரங்கள் விழுந்து கிடக்கின்றன அரசு அதிகாரிகள் அப்புறப்ப டுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.