திருவாரூர் மாவட்டத்தில் கடும் பனிபொழிவு-வாகன ஓட்டிகள் அவதி
- திருவாரூர் மாவட்டம் முழுவதும் சாலைகள் முழுவதும் பனிப்பொழிவு காரணமாக புகை மண்டலமாக மாறி காட்சியளிக்கிறது.
- பனிப்பொழிவின் காரணமாக திருவாரூர் ெரயில் நிலையத்தை முழுமையாக பனிமூட்டம் மூடி மறைத்துள்ளது.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டம் முழுவதும் சாலைகள் முழுவதும் பனிப்பொழிவு காரணமாக புகை மண்டலமாக மாறி காட்சியளிக்கிறது.
காலை 8 மணிக்குப் பின்னரும் பனிமூட்டம் கடுமையாக இருப்பதால் வாகன ஓட்டிகள் சாலை தெரியாததால் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி தங்களது வாகனங்களில் செல்கின்றனர்.
மேலும் அன்றாட பணிகளுக்கு செல்வோரும் பாதசாரிகளும் உடற்பயிற்சி மேற்கொள்வோரும் இந்த பனிப்பொழிவு காரணமாக கடும் அவதிக்கு ஆளாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக திருவாரூர், கூத்தாநல்லூர், மாங்குடி, நன்னிலம், கொரடாச்சேரி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது.
பனிப்பொழிவின் காரணமாக திருவாரூர் ெரயில் நிலையத்தை முழுமையாக பனிமூட்டம் மூடி மறைத்துள்ளது.
மேலும் தற்போது சம்பா நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ள விவசாய நிலங்கள் முழுவதுமாக பனிமூட்டம் மூடி மறைத்துள்ளது.
இதேபோன்று திருவாரூர் தியாகராஜர் கோயிலுக்கு சொந்தமான கமலாலயக் குளம் முழுவதும் பனி மூட்டத்தின் காரணமாக குளம் முழுவதும் மூடுபனியால் மறைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கடுமை யான பனிப் பொழிவின் காரணமாக கோவிலுக்குச் செல்ப வர்களும்மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். சாலையில் செல்பவர்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி பயணித்து வருகின்றனர்.