உள்ளூர் செய்திகள்

பாரம்பரிய நடைபயணத்தை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடங்கி வைத்தார்.

பாரம்பரிய நடைபயணம்- கலெக்டர் தொடங்கி வைத்தார்

Published On 2022-11-27 10:04 GMT   |   Update On 2022-11-27 10:04 GMT
  • சங்கீத மஹால் மற்றும் சரஸ்வதி மஹால் நூலகம் வரை பாரம்பரிய நடைபயணம் தொடங்கப்பட்டுள்ளது.
  • புராதன சின்னங்களின் வரலாற்றை பற்றி பொதுமக்கள் எளிய முறையில் அறிந்து கொள்ள முடியும்.

தஞ்சாவூர்:

தஞ்சாவூர் பெரிய கோயில் வளாகத்தில் இருந்து சுற்றுலா வளர்ச்சி குழுமம் சார்பில் பாரம்பரிய நடைபயணத்தை மாவட்ட கலெக்டர் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் கூறியதாவது:-

முதலமைச்சர் உத்தரவுக்கிணங்க உலக பாரம்பரிய வார கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக தஞ்சாவூர் பெரிய கோயில் வளாகத்தில் இருந்து தஞ்சாவூர்கோட்டை, தஞ்சாவூர் அகழி,வீணை தயாரித்தல், தேர் நிறுத்துமிடம், தஞ்சை நால்வர் இல்லம், கல்யாணசுந்தரம் மேல்நி லைப்பள்ளி, தானிய களஞ்சியம், சங்கீத மஹால் மற்றும் சரஸ்வதி மஹால் நூலகம் வரை பாரம்பரிய நடைபயணம் தொடங்கப்பட்டு உள்ளது.

தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சி குழுமம் சார்பில் மாநகரில் உள்ள புராதன சின்னங்களை பாதுகாத்து, மேம்படுத்தி அதன் பெருமைகளை அனைவருக்கும் அறியும் செய்யும் வண்ணம் பாரம்பரிய நடைபயணம் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

இந்த பாரம்பரிய நடை பயணத்தின் மூலம் தஞ்சாவூர் மாவட்டத்தின் புராதன சின்னங்களின் வரலாற்றைப் பற்றி பொதுமக்கள் எளிய முறையில் அறிந்து கொள்ள முடியும் .

இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், சுற்றுலா அலுவலர் நெல்சன், சுற்றுலா வழிகாட்டி செல்வம், போக்குவரத்து பிரிவு இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News