உள்ளூர் செய்திகள்

மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க பேரூராட்சி தலைவர் மணிமேகலை ஆனந்த் அடிக்கல் நாட்டிய காட்சி.

தென்திருப்பேரை 12-வது வார்டில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அடிக்கல் நாட்டு விழா

Published On 2022-11-10 09:02 GMT   |   Update On 2022-11-10 09:02 GMT
  • தென்திருப்பேரை பேரூராட்சி 12-வது வார்டு குட்டித்தோட்டம் பகுதியில் 30-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது
  • குடிநீர் பிரச்சினையை தீர்க்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

தென்திருப்பேரை:

தென்திருப்பேரை பேரூராட்சி 12-வது வார்டு குட்டித்தோட்டம் பகுதியில் 30-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. இப்பகுதி மக்கள் விவசாயத்தையே தங்களின் வாழ்வாதாரமாக கொண்டுள்ளனர். விவசாய பணிகள் மேற்கொள்ளும் போது குறிப்பிட்ட நேரங்களில் குடிநீர் வருவதால் பெரும் சிரமத்திற்கு மக்கள் ஆளாகினர். எனவே குடிநீர் பிரச்சினையை தீர்க்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று 15 -வது நிதி குழு திட்டத்தின் கீழ் ரூ.3.60 லட்சம் மதிப்பீட்டில் குட்டி தோட்டத்தில்10,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டி அமைக்க திட்டமிடப்பட்டு அதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

பேரூராட்சி தலைவர் மணிமேகலை ஆனந்த் தலைமை தாங்கினார். செயல் அலுவலர் ரமேசு பாபு, துணைத் தலைவர் அமுதவல்லி துரைராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இது குறித்து பேரூராட்சி தலைவர் மணிமேகலை ஆனந்த் கூறுகையில், உள்ளாட்சி அமைப்பின் முக்கிய பணி என்பது பொதுமக்களின் அடிப்படை தேவைகளான குடிநீர் வசதி, சாலை வசதி, சுகாதாரப்பணிகள் உள்ளிட்டவை பொதுமக்களுக்கு கிடைக்க செய்வதாகும். இதில் எந்த விதமான பாரபட்சமும் தாமதமும் இருக்கக் கூடாது என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இதன்படி தென்திருப்பேரை பேரூராட்சியில் பொது மக்களின் அடிப்படைத் தேவைகள் உடனுக்குடன் பூர்த்தி செய்யப்பட்டு வருவதாக கூறினார்.

நிகழ்ச்சியில் தென்திருப்பேரை பேரூராட்சி கவுன்சிலர்கள் ஆனந்த், கீதா, குமரேசன், மாரியம்மாள், சீதா லட்சுமி, சண்முகசுந்தரம், காசி லட்சுமி, துரைராஜ், கல்லாம்பாறை தி.மு.க. வார்டு செயலாளர் ராஜேந்திரன், குட்டிதோட்டம் முத்துகிருஷ்ணன், கீர்த்தி, பெருமாள், ராஜகோபால், பாலகிருஷ்ணன் வெங்கடேசன், சுரேஷ் கன்ஸ்ட்ரக்சன் உரிமையாளர் சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News