உள்ளூர் செய்திகள்

நிலக்கடலை சாகுபடியில் புதிய தொழில் நுட்பங்களை பயன்படுத்தி அதிக மகசூல் பெறலாம்

Published On 2022-12-16 09:24 GMT   |   Update On 2022-12-16 09:24 GMT
  • ஒரு கிலோ விதையுடன் 4 கிராம் டிரைக்கோடெர்மா விரிடி கொண்டு பூஞ்சான விதை நேர்த்தி செய்ய வேண்டும்.
  • விதைத்த 40 முதல் 45 வது நாளில் மண்ணை கொத்தி 80 கிலோ ஜிப்சத்தை இட்டு அணைக்க வேண்டும்.

கும்பகோணம்:

தஞ்சாவூர் மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்று உதவி இயக்குனர் முகமது பாரூக் வெளியிட்டுள்ள அறிக்கை–யில் கூறியிப்பதாவது:-

தற்போது நிலக்கடலை விதைக்கும் போது, போதிய மழை, சரியான தட்ப வெப்ப நிலை இருப்பதால் அதிக மகசூலுக்கு வாய்ப்புள்ளது.

தரமான விதைகள் குறை–ந்தபட்சம் 70 சதவீதம் முளைப்பு திறனும், அதிகபட்ச ஈரப்பதம் 9 சதவீதம் இருக்க வேண்டும். பூச்சி பூஞ்சாண நோய் தாக்குதல் இல்லாமல் இருக்க வேண்டும்.

மண் மற்றும் விதைகள் வழியாக பரவும் நோய்களால் நிலக்கடலை இள–ஞ்செடி பாதிக்கப்பட்டு பயிர்களின் எண்ணிக்கை குறைந்து விளைச்சல்பாதிக்க–ப்படுகின்றது.

இதனை தவிர்க்க விதைகளின் மூலம் பரவும் பூஞ்சான நோய்களை தடுக்க நிலக்கடலை விதைப்பதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பாக ஒரு கிலோ விதையுடன் 4 கிராம் டிரைக்கோடெர்மா விரிடி கொண்டு பூஞ்சான விதை நேர்த்தி செய்ய வேண்டும்.

நிலக்கடலை பயிருக்கு ஏக்கருக்கு 80 கிலோ விதைகள் தேவைப்படும். விதைகளை 30 சென்டி மீட்டர் இடைவெளியில் விதைத்து ஒரு சதுர மீட்டருக்கு 33 செடிகள் என்ற அளவில் பயிர் எண்ணி–க்கையை பராமரிக்க வேண்டும்.

பொக்குகாய்கள் உருவாவதை போக்க நிலக்கடலை நுண்ணூட்டச்சத்து 5 கிலோ, 2 கிலோ மணலுடன் கலந்து வயல் பரப்பின் மேல் தூவ வேண்டும்.

விதைத்த 40 முதல் 45 வது நாளில் மண்ணைக் கொத்தி 80 கிலோ ஜிப்சத்தை இட்டு அணைக்க வேண்டும். இதிலுள்ள சுண்ணாம்புச் சத்து, கந்தகச்சத்து அதிக எண்ணெய்ச்சத்து கொண்ட திரட்சியான காய்கள் அதிக அளவில் உருவாக உதவுகிறது .

நிலக்கடலை சாகுபடியில் புதிய தொழில் நுட்பங்களை பயன்படுத்தி அதிக மகசூல் பெற்று அதிக லாபம் அடைலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News