மலைவாழ் மகளிர் குழு உறுப்பினர் சேர்ப்பு முகாம்
- புதிய மகளிர் குழு உறுப்பினர்கள் சேர்க்கும் சிறப்பு முகாம் ஏற்காடு வட்டார வளர்ச்சி அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.
- முகாமில் சேலம் சரக துணை பதிவாளர் விஜயா வரவேற்புரை ஆற்றினார்.
சேலம்:
ஏற்காடு மலைவாழ் மக்கள் பெரும்பல நோக்கு கூட்டுறவு சங்கத்தில் புதிய மகளிர் குழு உறுப்பினர்கள் சேர்க்கும் சிறப்பு முகாம் ஏற்காடு வட்டார வளர்ச்சி அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. முகாமில் சேலம் சரக துணை பதிவாளர் விஜயா வரவேற்புரை ஆற்றினார்.
இதனைத் தொடர்ந்து சேலம் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ரவிக்குமார் தலைமை உரை ஆற்றினார் . அவர் பேசுகையில்,ஏற்காட்டில் உள்ள அனைத்து பழங்குடியின மகளிரும் ஏற்காடு மலைவாழ் பெரும்பல நோக்கு கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக சேர்ந்து மகளிர் சுய உதவிக் குழுக்களின் மூலம் தங்களின் பொருளாதாரத்தை உயர்த்திக் கொள்ளும் பொருட்டு அரசு வழிகாட்டுதலின்படி கடன் பெற்று பயனடையுமாறு கேட்டுக் கொண்டார்.
இந்த சிறப்பு முகாமின் மூலம் 25 மகளிர் சுய உதவி குழுக்களாக சுமார் 300 பேர் ஏற்காடு மலைவாழ் மக்கள் பெரும்பல நோக்கு கூட்டுறவு சங்கத்தில் புதிய உறுப்பினர்களாக சேர்ந்து கொண்டனர். முகாமின் முடிவில் சங்க செயலாளர் பிரகாஷ் நன்றி கூறினார். விழாவில் ஏற்காடு மலைவாழ் மக்கள் பெரும்பல நோக்கு கூட்டுறவு சங்கத்தின் கூட்டுறவு சார்பதிவாளர் சுகன்யா அவர்கள் மற்றும் கூட்டுறவு சங்க பணியாளர்கள் கலந்து கொண்டனர்.