உள்ளூர் செய்திகள்

ஓசூர் எம்.ஜி.ஆர். கல்லூரியில் தொழில் முனைவோர் கருத்தரங்கம்

Published On 2023-10-05 09:57 GMT   |   Update On 2023-10-05 09:57 GMT
  • ஓசூர் எம்.ஜி.ஆர் கல்லூரியில் தொழில் முனைவோர் கருத்தரங்கம் நடைபெற்றது.
  • இந்நிகழ்ச்சியில், சுமார் 200-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

ஓசூர் எம்ஜிஆர் கல்லூரி வணிக மேலாண்மை துறை சார்பில், தொழில் முனை வோர் கருத்தரங்கம் நடை பெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு, எம்ஜிஆர் கல்லூரி முதல்வர் முத்துமணி தலைமை தாங்கி பேசுகையில், இன்றைய காலக்கட்டத்தில் வேலை யில்லாமல் இருப்பது மிகவும் கடினம். ஒரு குடும்பம் நிலையான வருமானத்தை ஈட்ட வேண்டும் என்றால் ஆண், பெண் பாகுபாடு இன்றி தொழில்துறையில் முன்னேறுவது அவசியமாக உள்ளது என்று கூறினார்.முன்னதாக, வணிக மேலாண்மை துறைத் தலைவர் மஞ்சுநாத் வர வேற்று பேசினார். இதில், சிறப்பு விருந்தி னராக சுரேஷ் கலந்து கொண்டு, ஸ்டீல் டியுப்ஸ் குறித்த கருத்துரை களை மாணவர்களிடையே தெளிவு படுத்தினார்.

மற்றுமொரு சிறப்பு விருந்தினராக, கார்த்திக் ஏழுமலை கலந்து கொண்டு, தொழில் முனை வோருக் கான தகுதிகள், நோக்கங்கள், அதனால் உண்டாகும் பயன்கள் பற்றிய சிந்தனை களையும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொழில் முனைவோர் அமைப்புகள் எங்கெல்லாம் உள்ளன? என்றும், அந்த அமைப்பு களை எவ்வாறு அணுகுவது என்பது குறித்தும் நிகழ்ச்சியில் பேசினார். இந்நிகழ்ச்சியில், சுமார் 200-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். முடிவில், வணிக மேலாண்மை துறை பேராசிரியர் பிரகாஷ் நன்றி கூறினார்.

தொழில் முனை வோர் கருத்தரங்கிற்கான ஏற்பாடு களை, வணிக மேலாண்மை துறை பேராசி ரியர்கள் செய்திருந்தனர்.

Similar News