அத்தனூர் சமத்துவபுரத்தில் ரூ.87.91 மதிப்பீட்டில் வீடுகள் பராமரிப்பு பணி
- வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அத்தனூர் பேரூராட்சியில் தேசிய நெடுஞ்சாலை அருகே சமத்துவபுரம் உள்ளது.
- நெ.3 குமாரபாளையம் ஊராட்சியில் உள்ள அண்ணா மறுமலர்ச்சி திட்ட நூலக பராமரிப்பு பணியையும் அவர் ஆய்வு செய்தார்.
ராசிபுரம்:
நாமக்கல் மாவட்டம், வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அத்தனூர் பேரூராட்சியில் தேசிய நெடுஞ்சாலை அருகே சமத்துவபுரம் உள்ளது. சமத்துவபுரத்தில் உள்ள 100 வீடுகளில் உள்கட்டமைப்பு பணிகள் மற்றும் பராமரிப்பு பணிகள் ரூ.87.91 லட்சம் மதிப்பீட்டில் நடந்து வருகிறது. இந்த சமத்துவபுரம் வீடுகளின் மேம்பாட்டு பணியை சென்னை ஊரக வளர்ச்சித் துறையின் கூடுதல் இயக்குனர் குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதேபோல் நெ.3 குமாரபாளையம் ஊராட்சியில் உள்ள அண்ணா மறுமலர்ச்சி திட்ட நூலக பராமரிப்பு பணியையும் அவர் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது நாமக்கல் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வடிவேலு, உதவி செயற்பொறியாளர் பார்த்தீபன், வெண்ணந்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மாதவன், பிரபாகரன், வெண்ணந்தூர் வட்டார வளர்ச்சி அலுவலக பொறியாளர்கள் பூபதி, கவுரி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.