உள்ளூர் செய்திகள்

நிகழ்ச்சியில் தெற்கு தொகுதி செல்வராஜ் எம்.எல்.ஏ. பேசிய போது எடுத்த படம். அருகில் திருப்பூர் சப்கலெக்டர் ஸ்ருதன் ஜெய நாராயணன் மற்றும் பலர் உள்ளனர்.

அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் வழங்கப்படும் - செல்வராஜ் எம்.எல்.ஏ., உறுதி

Published On 2023-01-02 04:45 GMT   |   Update On 2023-01-02 04:45 GMT
  • நீதிமன்றம் உத்தரவின்படி அந்த வீடுகளை காலி செய்யுமாறு ஏற்கனவே 3 முறை நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
  • நெருப்பெரிச்சல் மற்றும் செட்டிபாளையம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடுகள் வழங்கப்படும்.

திருப்பூர் :

திருப்பூர் மாநகராட்சி 10 மற்றும் 9-வது வார்டுக்குட்பட்ட நல்லாறு, செட்டிபாளையம் பகுதிகளில் 187 வீடுகள் நீர்வழி ஆக்கிரமிப்பாக இருப்பதாக கண்டறியப்பட்டது. மேலும் சென்னை நீதிமன்றம் உத்தரவின்படி அந்த வீடுகளை காலி செய்யுமாறு ஏற்கனவே 3 முறை நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி அந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும். ஆனால் அங்கு வசிப்பவர்களுக்கு மாற்று வீடுகள் வழங்குவது தொடர்பாக முடிவு செய்யப்படாததால் இதுதொடர்பாக அப்பகுதி மக்களிடம் ஆத்துப்பாளையத்தில் உள்ள திருமண மண்டபத்தில் ஆலோசிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு திருப்பூர் சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய நாராயணன் தலைமை தாங்கினார். திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. க.செல்வராஜ் முன்னிலை வகித்தார். நீர்ப்பாசனத்துறை உதவி பொறியாளர் நல்லதம்பி வரவேற்றார்.

இதில் செல்வராஜ் எம்.எல்.ஏ. பேசியதாவது:- நீதிமன்ற உத்தரவின்படி இந்த பகுதியில் உள்ள வீடுகள் அகற்றப்பட்டாலும், இங்கு வசிக்கும் அனைவருக்கும் நெருப்பெரிச்சல் மற்றும் செட்டிபாளையம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடுகள் வழங்கப்படும்.

திருப்பூர் 9 மற்றும் 10-வது வார்டுகளில் நீர்வழி ஆக்கிரமிப்பில் உள்ள வீடுகள் அகற்றப்பட்டாலும் அங்கு வசிப்பவர்களுக்கு அனைத்து மாற்று ஏற்பாடுகளும் செய்து தரப்படும்.அந்த வீடுகளுக்கு வழங்க வேண்டிய தொகைக்கான வங்கிக் கடன் வசதியையும் அதிகாரிகளே சுயஉதவிக்குழுக்கள் மூலமாக ஏற்பாடு செய்து கொடுப்பார்கள்.இவ்வாறு அவர் பேசினார்.முடிவில் திருப்பூர் வடக்கு தாசில்தார் கோபாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News