தட்கல் சிறப்பு திட்டத்தின் கீழ் விவசாய மின் இணைப்பு பெறுவது எப்படி?
- தட்கல் முறையில் பதிவு செய்யும் விவசாயிகளுக்கு மின் இணைப்புகள் வழங்கப்படும்.
- விவசாயிகள் தங்கள் பகுதி இயக்குதல் மற்றும் பராமரித்தல் செயற்பொறியாளரை தொடர்பு கொள்ளலாம்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறி யாளர் நளினி வெளியி ட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைப்படி விவசாய மின் இணைப்பு பெற காத்திருப்பு பட்டியலில் உள்ள விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் விரைந்து விவசாய மின் இணைப்பு பெறும் வகையில் தட்கல் முன் இணைப்பு வழங்கல் திட்டம் 2017 முதல் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தால் நடைமுறைப்படுத்தப்பட்டு விவசாய மின் இணைப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.
ஏற்கனவே தட்கல் முறையில் பதிவு செய்துள்ள விவசாயிகளுக்கும், தற்போது தட்கல் முறையில் பதிவு செய்யும் விவசாயி களுக்கும் முன்னுரிமை அடிப்படையில் விவசாய மின் இணைப்புகள் வழங்கப்படும்.
எனவே தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் ஏற்கனவே விவசாய மின் இணைப்பு கோரி பதிவு செய்துள்ள விருப்பமுள்ள விவசாயிகள் இந்த தட்கல் சிறப்பு திட்டத்தின் கீழ் விவசாய மின் இணைப்பு பெற தங்கள் பகுதி இயக்குதல் மற்றும் பராமரித்தல் செயற்பொறியாளரை தொடர்பு கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.