உள்ளூர் செய்திகள்

மழை காலங்களில் பயிர்களை காப்பாற்றுவது எப்படி?

Published On 2023-11-18 10:04 GMT   |   Update On 2023-11-18 10:04 GMT
  • களைக்கொல்லிகள், பூச்சி மருந்து இவைகளை மழைக்கு பிறகு பயன்படுத்தி பயன்பெற வேண்டும்.
  • விவசாயிகள் தேவைப்படும் சந்தேகங்களை அரசு வேளாண் கல்லூரி விஞ்ஞானிகள் இடம் பெற்று பயன்பெற வேண்டும்.

திருவோணம்:

ஈச்சங்கோட்டை எம்.எஸ்.சுவாமிநாதன் அரசு வேளாண் ஆராய்ச்சி மையம் சார்பில் விவசாயிகள் தாங்கள் பயிரிட்டு இருக்கும் நெல் பயிர்களில் கலைக்கொல்லி ரசாயன மருந்து , உரம் இவைகளை தவிர்த்து அரசு அறிவிக்கும் மழை குறித்த தகவல்களை கேட்டு அதன்படி மழைக்குப் பிறகு இந்த உரங்களை பயிர்களுக்கு ஈடுமாறு வேளாண்மை கல்லூரி முதல்வர் வேலாயுதம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறியதாவது :-

கனமழையால் விவசாயிகள் கவனமாக தாங்கள் பயிரிட்டு இருக்கும் பயிர்களுக்கு உரங்கள், களைக்கொல்லிகள், பூச்சி மருந்து இவைகளை மழைக்கு பிறகு பயன்படுத்தி பயன்பெற வேண்டும். தங்களது விளை நிலங்களில் நீர் தேங்காமல் முறையாக வாய்க்கால் அமைத்து உடனடியாக பயிர்களை காப்பாற்ற வேண்டும். ஆடு, மாடுகளையும் கவனமாக பராமரித்து மேய்ச்சலில் விடாமல் பாதுகாத்து கொள்ள வேண்டும்.

அரசு அறிவிப்புகளை பின்பற்ற வேண்டும். விவசாயிகளுக்கு தேவையான ஆய்வு விஞ்ஞான ரீதியாக அரசு வேளாண் கல்லூரி ஆராய்ச்சி யாளர்கள் அளித்து கொ ண்டி ருப்பார்கள். விவசாயி கள் தேவைப்படும் சந்தேக ங்களை அரசு வேளாண் கல்லூரி விஞ்ஞானிகள் இடம் பெற்று பயன்பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News