உள்ளூர் செய்திகள்

வாழைத்தார்களுடன் மனு அளிக்க வந்த விவசாயிகள்.

சூறாவளி காற்றால் சேதம்- இழப்பீடு கேட்டு வாழைத்தார்களுடன் கலெக்டர் அலுவலகம் வந்த விவசாயிகள்

Published On 2023-03-28 09:09 GMT   |   Update On 2023-03-28 09:09 GMT
  • தென்காசி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சூறாவளி காற்றுடன் கோடை மழை பெய்தது.
  • விவசாயிகள் கையில் வாழைத்தார்களுடன் கூட்டத்திற்கு வந்திருந்தனர்.

தென்காசி:

தென்காசி மாவட்டம் வீ. கே. புதூர் அருகே உள்ள கீழவீராணம் பகுதியில் விவசாயிகள் அதிக அளவில் வாழை பயிரிட்டுள்ளனர். தற்பொழுது வாழைகள் குலைதள்ளி பாதி விளைந்த நிலையில் இருந்தது. கடந்த சில நாட்களாக தென்காசி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சூறாவளி காற்றுடன் கோடை மழை பெய்தது. இதில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழைகள் சாய்ந்து சேதம் அடைந்தது. இதனால் விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற குறைதீர்க்கும் கூட்டத்திற்கு சூறைகாற்றால் பாதிக்கப்பட்ட வாழை விவசாயிகள் கையில் வாழைத்தார்களுடன் வந்திருந்தனர். அவர்கள் சேதமடைந்த வாழைகளுக்கு உரிய இழப்பீடு தொகை வழங்க கோரி மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் ரவிச்சந்திரன் விவசா யிகளுக்கு தேவையான இழப்பீடுகளை வழங்க நடவடிக்கைகள் எடுப்பதாக உறுதி அளித்தார்.

Tags:    

Similar News