தென்காசியில் தூய்மை பணியாளர் நல வாரிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை
- 107 தூய்மை பணியாளர்களுக்கு உறுப்பினர் அடையாள அட்டைகளை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.
- மனுதாரர்களுக்கு உரிய பதில் வழங்குமாறு அனைத்து துறை அலுவலர்களுக்கும் கலெக்டர் அறிவுறுத்தினார்.
தென்காசி:
தென்காசி மாவட்ட கலெக்டர் கூட்ட அரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ஆகாஷ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் தமிழ்நாடு தூய்மை பணியாளர் நல வாரியத்தின் மூலம் 107 தூய்மை பணியாளர்களுக்கு நலவாரிய உறுப்பினர் அடையாள அட்டைகளை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.
மேலும் கூட்டத்தில் இலவச வீட்டு மனை பட்டா, முதியோர் உதவித்தொகை, அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தர கோருதல்,பட்டா மாறுதல்,மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை மற்றும் இதர மனுக்கள் என மொத்தம் 329 மனுக்கள் பெறப்பட்டன.கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் தகுதி வாய்ந்த மனுக்களாக உள்ளதா என்பதை விசாரணை செய்து விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரர்களுக்கு உரிய பதில் வழங்குமாறு சம்பந்தப்பட்ட அனைத்து துறை அலுவலர்களுக்கும் கலெக்டர் ஆகாஷ் அறிவுறுத்தினார்.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயினுலாத்தீன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) முத்து மாதவன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் குணசேகரன், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கந்தசாமி, உதவிஆணையர் கலால் ராஜ மனோகரன், தாட்கோ மேலாளர் சுந்தரராஜன் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.