உள்ளூர் செய்திகள்

குழந்தைத் தொழிலாளர் பணிபுரிவது கண்டறிந்தால் இலவச தொலைபேசியில் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம்

Published On 2023-03-17 09:47 GMT   |   Update On 2023-03-17 09:47 GMT
  • 16 முதல் 18 வயதிற்குட்பட்ட வளரிளம் பருவத்தினர்களை பணிக்கு அமர்த்துவது குற்றமாகும்.
  • முரண்பாடுகள் கண்டறிப்பட்டால், உரிய அபராத நடவடிக்கை மேற்கொள்ளப்படும்

கிருஷ்ணகிரி,

குழந்தைத் தொழிலாளர் பணிபுரிவது கண்டறிந்தால், பொதுமக்கள் 1098 என்ற இலவச தொலைபேசியில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என கிருஷ்ணகிரி தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) வெங்கடாசலபதி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

எடையளவுகள் மற்றும் மின்னனு தராசுகள் முத்திரையின்றி பயன்படுத்துவது, பொட்டலப் பொருட்கள் அதிகபட்ச சில்லறை விலையை விட கூடுதல் விலைக்க விற்பனை செய்வது மற்றும் உரிய அறிவிப்புகள் இல்லாமல் விற்பனை செய்யப்படுவது சட்டமுறை எடையளவுச் சட்டம் மற்றும் சட்டமுறை எடையளவு பொட்டலப் பொருடுகள் விதிகளின் கீழ் தண்டனைக்குரியதாகும்.

ஆய்வின் போது முரண்பாடுகள் கண்டறிப்பட்டால், உரிய அபராத நடவடிக்கை மேற்கொள்ளப்படும். குறைந்தபட்சட ஊதியச் சட்டத்தின்கீழ் அரசு நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச ஊதியத்தினை வழங்காதது, ஆய்வின் சமயம் கண்டறியப்பட்டால் சட்டப்படி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மேலும், 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் 16 முதல் 18 வயதிற்குட்பட்ட வளரிளம் பருவத்தினர்களை பணிக்கு அமர்த்துவது குற்றமாகும்.

அவ்வாறு பணிக்கு ஈடுபடுத்துவது கண்டறியப்பட்டால் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட நிறுவன உரிமையாளருக்கு ரூ.20 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை அபராதம் அல்லது ஆறுமாதங்கள் முதல் இரண்டாண்டு வரை சிறைத் தண்டனை அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்க நேரிடும். மேலும், குழந்தைத் தொழிலாளர் பணிபுரிவது கண்டறிந்தால், பொதுமக்கள் 1098 என்ற இலவச தொலைபேசிக்கு தகவல் தெரிவிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

Tags:    

Similar News