கடலூரில் முறைகேடாக செம்மண் எடுப்பதை தடுத்து நிறுத்த வேண்டும்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டத்தில் தீர்மானம்
- 50 ஏக்கர் நிலத்தில் இருந்த செம்மண் எடுக்கப்பட்டுள்ளது.
- இடுபொருள் மானியம் உள்ளிட்ட நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடலூர்:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கடலூர் மாவட்ட நகர ஒன்றிய வட்ட செயலாளர்கள் கூட்டம் கடலூர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் மாவட்ட குழு உறுப்பினர் ராஜா தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட செயலாளர் மாதவன் , மாநில குழு உறுப்பினர் ரமேஷ் பாபு, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் உதயகுமார், ரவிச்சந்திரன், அசோகன், தேன்மொழி, ராஜேஷ் கண்ணன் , தண்டபாணி, பாலமுருகன், ஜெயபாண்டியன், ஏழுமலை, விஜய், பஞ்சாசரம், அன்பழகன், ஆழ்வார் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பண்ருட்டி ஒன்றியத்தில் உள்ள சேதமைடைந்த முந்திரி பயிர்களை தோட்டக்கலைத் துறை ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட பயிர்களை கணக்கெடுப்பு செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கு இடுபொருள் மானியம் உள்ளிட்ட நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடலூர் எம். புதூர், திருவந்திபுரத்தில் செம்மண் குவாரிகள் அமைக்கப்பட்டு 50 ஏக்கர் நிலத்தில் இருந்த செம்மண் எடுக்கப்பட்டுள்ளது. தற்போது கொண்டங்கி ஏரி உள்ள பகுதியில் நடுவீரப்பட்டு உள்ளிட்ட இடங்களில் தினசரி நூற்றுக்கணக்கான லாரிகளில் செம்மண் பாதுகாப்பு இன்றி எடுத்துச் செல்லப்படுகிறது. இதற்கு முறையாக அனுமதி பெற்றுள்ளதா என்பதை சுரங்கத்துறையும் மாவட்ட நிர்வாகமும் தெளிவுப்படுத்த வேண்டும். எனவே இதனை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் முறைகேடுகளாக நடக்கும் மண் குவாரிகளை இழுத்து முடவும் அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாக மண் எடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.