சிதம்பரம் அருகே கிள்ளை ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்ட இருளர் இன மக்கள்
- 15-க்கும் மேற்பட்ட கிராமமக்கள் சிகிச்சைக்காக வந்து செல்வர்.
- ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டனர்.
கடலூர்:
சிதம்பரம் அருகே கிள்ளை பேரூராட்சியில் ஆரம்ப சுகாதார நிலையம் உள்்ளது. இங்கு கிள்ளை பகுதியை சுற்றியுள்ள 15-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சிகிச்சைக்காக வந்து செல்வர். இந்நிலையில் கிள்ளை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் உள்ள கிராமத்தில் வசிக்கும் இருளர் சமூக மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் இன்று காலை 10 மணிக்கு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வந்தனர். இவர்கள் ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டனர். கிள்ளை பகுதியில் வசிக்கும் இருளர் சமுதாய மக்களுக்கு சிகிச்சை அளிப்பதில் பாரபட்சம் காட்டுவதாக குற்றஞ்சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், இருளர் மக்கள் வந்தாலே, சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு செல்ல பரிந்துரைக்கும் டாக்டர்கள், நர்சுகளை பணி நீக்கம் செய்ய வேண்டுமென போராட்டம் நடத்தினர். கோரிக்கைகளை வலியுறுத்தி ஆரம்ப சுகாதார நிலையத்தின் வாசலில் அமர்ந்து இருளர் இன மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இத்தகவல் அறிந்த போலீ சார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இருளம் இன மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், மற்ற சமுதாய மக்களுக்கு சிகிச்சை வழங்கப்படுவதை போல, தங்களுக்கும் சிகிச்சை வழங்க வேண்டும். கிராம மக்களிடையே பாரபட்சம் காட்டும் டாக்டர்கள், நர்சுகள் மற்றும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி னர். இருளர் இன மக்களின் திடீர் போராட்டத்தால் கிள்ளை பகுதியில் பரபரப்பு நிலவியது.