உள்ளூர் செய்திகள்

சாத்தான்குளத்தில் தீவிபத்தில் ஆவணங்களை இழந்த பெண்ணுக்கு உடனடியாக ஆவணங்கள் அளிப்பு

Published On 2023-06-18 08:20 GMT   |   Update On 2023-06-18 08:20 GMT
  • சார்பதிவாளர் அலுவலக ஆவணங்கள், இறப்பு சான்று வாரிசு சான்று உள்ளிட்ட அசல் ஆவணங்கள் பயன்படுத்த முடியாத நிலையில் எரிந்து விட்டன.
  • இதனையடுத்து மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தலின்படி, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அலுவலக சான்றுகள் அனைத்தையும் உடனடியாக தாசில்தார் ரதிகலா வழங்கினார்.

சாத்தான்குளம்:

சாத்தான்குளம் சொக்கலிங்கபுரம் தெருவை சேர்ந்த செல்வராஜ் மனைவி மல்லிகா. இவரது வீட்டின் மின் இணைப்பு பெட்டியில் மின் கசிவு காரணமாக தீப்பொறி ஏற்பட்டு அதன் அருகில் பெட்டியில் வைக்கப்பட்டிருந்த முக்கிய அரசு ஆவணங்கள் எரிந்து சாம்பலானது.

இதுதொடர்பாக அவர் மாவட்ட கலெக்டருக்கு தகவல் தெரிவித்தார். இதனையடுத்து மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தலின்பேரில் சாத்தான்குளம் தாசில்தார் ரதிகலா விசாரணை மேற்கொண்டதில் சாத்தான்குளம் சார்பதிவாளர் அலுவலக ஆவணங்கள், இறப்பு சான்று வாரிசு சான்று, கணிணி பட்டா, நத்தம் பட்டா ஆகிய அசல் ஆவணங்கள் பயன்படுத்த முடியாத நிலையில் எரிந்து விட்டன என தெரியவந்தது. இதனையடுத்து மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தலின்படி பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அலுவலக சான்றுகள் அனைத்தையும் உடனடியாக தாசில்தார் ரதிகலா வழங்கினார். அப்போது கிராம நிர்வாக அலுவலர் முத்துராமலிங்கம் உள்ளிட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர். புகார் தெரிவித்த உடன் பாதிக்கப்பட்டவருக்கு உரிய சான்றுகளை வழங்கிட உத்தரவிட்ட மாவட்ட கலெக்டருக்கும், வழங்கிய தாசில்தாருக்கும் பாதிக்கப்பட்ட பெண் நன்றி தெரிவித்தார்.

Tags:    

Similar News