பாபநாசத்தில், அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
- பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
- அகவிலைப்படி, சரண்டர் தொகையை வழங்க வேண்டும்
பாபநாசம்:
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட இணை செயலாளர் தமிழ்வாணன் தலைமையில் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தின் போது கால முறை ஊதியத்தில் காலி பணியிடங்களை நிரப்பிட வேண்டும், சி.பி.எஸ் யை திட்டத்தை ரத்து செய்யவேண்டும். பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அகவிலைப்படி, சரண்டர் தொகையை வழங்கிட வேண்டும்.
தமிழக பட்ஜெட்டில் அரசு ஊழியர்களுக்கு வாழ்வாதார கோரிக்கைகள் இடம் பெறாததை கண்டித்து உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பாபநாசம் வட்டக்கிளை செயலாளர் ரவிச்சந்திரன், ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்க வட்ட செயலாளர் முரளிதரன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுகுமார், விஜயகுமார், ஓய்வு பெற்ற வருவாய் துறை வட்ட செயலாளர் கலியமூர்த்தி, வருவாய் துறை வட்ட செயலாளர் சுந்தேரேசன், வட்ட பொருளாளர் செல்வராணி, நில அளவை துறை வட்ட சார் ஆய்வாளர் தேவதாஸ், தலைமையிடுத்து துணை வட்டாச்சியர் தமயந்தி, உதவியாளர் பிரதாப், பதிவரை எழுத்தர் ரமேஷ், மற்றும் வருவாய் துறை, ஊரக வளர்ச்சி துறை, நில அளவைத் துறை உள்ளிட்ட ஊழியர்கள் கலந்து கொண்டனர்.