உள்ளூர் செய்திகள்

புவனகிரி குறிஞ்சிப்பாடி செல்லும்  பிரதான சாலையில் வாகன ஓட்டிகள் ஆபத்தான பயணம் மேற்கொள்வதை படத்தில் காணலாம்.

புவனகிரியில் ஆபத்தான பயணத்தால் வாகன ஓட்டிகள் அச்சம்

Published On 2022-06-17 10:35 GMT   |   Update On 2022-06-17 10:35 GMT
  • புவனகிரியில் ஆபத்தான பயணத்தால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்துள்ளனர்.
  • அந்த இடத்தில் சாலை அகலப்படுத்தும் பணிக்கு பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சாலை அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

கடலூர்:

புவனகிரி- குறிஞ்சிப்பாடி செல்லும் முக்கிய பிரதான சாலை. இந்த சாலை வழியாக ஏராளமான பஸ்கள், வாகனங்கள் செல்வது வழக்கம்.

இந்த சாலையில் மேல மணக்குடி என்னும் இடத்தில் குறுகிய வளைவு உள்ளது. இதனால் ஏராளமான விபத்துகள் ஏற்பட்டது. இதனை அறிந்த வாகன ஓட்டிகளும் அப்பகுதி மக்களும் தமிழக அரசுக்கும், மாவட்ட கலெக்டருக்கும் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தனர்.

இதன் அடிப்படையில் அந்த இடத்தில் சாலை அகலப்படுத்தும் பணிக்கு பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சாலை அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணி ஆமை வேகத்தில் நடைபெறுகிறது. இன்னும் சில மாதங்களில் மழை காலங்கள் ஆரம்பித்துவிடும், அப்படி கனமழை பெய்ய தொடங்கினால் முற்றிலும் போக்குவரத்து துண்டிக்கப்படும். இந்த வழியாக கடலூர், பாண்டி, சென்னை மற்றும் பல்வேறு ஊர்களுக்கு செல்லும் முக்கிய சாலை.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு மாவட்ட கலெக்டர் இதனை பார்வையிட்டு விரைந்து முடிக்க உத்தரவிட்டு சென்றுள்ளார். மாவட்ட கலெக்டர் எந்த நிலையில் இந்த பணியை பார்த்தாரோ அதே நிலையில்தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆகையால் அகலப்படுத்தும் பணியை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கும், ஒப்பந்ததாரர்களுக்கும் உத்தரவிட வேண்டும் என்று வாகன ஓட்டிகளும், அப்பகுதி மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News