கடலூர் மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை கட்டுப்படுத்த 4,685 கண்காணிப்பு காமிரா அமைப்பு
- கடலூர் மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை கட்டுப்படுத்த 4,685 கண்காணிப்பு காமிரா அமைக்கப்பட்டுள்ளது,
- மாவட்டத்தில் குற்ற சம்பவங்கள் மற்றும் வாகன விபத்துக்கள் போன்றவற்றை குறைத்து கட்டுப்படுத்து வதற்கு ஏதுவாக அமையும்.
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் குற்ற செயல்களை தடுக்கவும் , குற்றம் நடந்த பின் குற்றவாளிகளை அடையாளம் காணவும் மாவட்டத்தில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடலூர்மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் ஏற்பாட்டின் பேரில் கடலூர் கலெக்டர் பாலசுப்பிரமணியம் பரிந்துரையின்பேரில் கடலூர் மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியி லிருந்து கண்காணிப்பு கேம ராக்கள் பொருத்த நிதி வழங்க வேண்டும் என விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் ரூ1 கோடியே 30 லட்சம் பெறப்பட்டு அந்த நிதியில் இருந்து 520 கண்காணிப்பு காமிராக்கள்பொருத்தப்பட்டுள்ளது.
கடலுார் மாவட்டத்தில் அனைத்து காவல் நிலையங்களிலும் 297 கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளது . இதில் தனியார் நிறுவனங்கள் , வியாபார சங்க பிரதிநிதிகள் மற்றும் தன்னார்வலர்கள் பங்களிப்புடன் மாவட்டத்தில் 3868 கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளது . கடலூர் பகுதியில் 885, சிதம்பரம் 1040, புவனகிரி 144, நெய்வேலி 589, சேத்தியாத்தோப்பு 445 , காட்டுமன்னார்கோவில் 166, குறிஞ்சிப்பாடி 83, விருத்தாச்சலம் 521 , பண்ருட்டி 487 , திட்டக்குடி 247 மற்றும் வேப்பூர் 78 என மொத்தம் 4685 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு தொடர்ந்து கண்காணி க்கப்பட்டு வருகிறது . இதன் மூலம் மாவட்டத்தில் குற்ற சம்பவங்கள் மற்றும் வாகன விபத்துக்கள் போன்றவற்றை குறைத்து கட்டுப்படுத்து வதற்கு ஏதுவாக அமையும்.