உள்ளூர் செய்திகள்

கடலூர் மாவட்டத்தில் அரசு பணியாளர் சங்கத்தினர் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம்: பணிகள் பாதிப்பு; பொதுமக்கள் கடும் அவதி

Published On 2023-03-28 09:33 GMT   |   Update On 2023-03-28 09:33 GMT
  • புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அரசு பணியாளர்கள் அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
  • இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன

கடலூர்:

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அரசு பணியாளர்கள் அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும். நிரந்தர ஊதிய விகிதம் இல்லாத ஊழியர்களுக்கு நிரந்தர காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். பொது விநியோக திட்டத்திற்கு தனித்துறை அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தினர் சார்பில் இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அதன்படி கடலூர் மாவட்டத்தில் ரேஷன் கடைகள், சத்துணவு மையங்கள், அங்கன்வாடி பணியாளர்கள், தாலுகா அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்களில் பணி புரியும் அரசு பணியாளர் சங்கத்தை சேர்ந்த ஊழியர்கள் ஏராளமானோர் பணிக்கு வரவில்லை. ஆனால் அரசு அலுவலகங்கள், ரேஷன் கடைகள் வழக்கம் போல் செயல்பட்டன. இந்த வேலை நிறுத்தத்தில் கடலூர் மாவட்டத்தில் சுமார் ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள் ஈடுபட்டதாக தெரிகிறது. மேலும், கடலூர் பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அரசு பணியாளர் சங்கத்தை சேர்ந்தவர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பா ட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News