கடலூர் மாவட்டத்தில் வருவாய் துறையினர் வேலையை புறக்கணித்து வெளிநடப்பு போராட்டம்
- அலுவலக உதவியாளர் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.
- அனைத்து கோரிக்கைகளின் மீது உரிய ஆணைகள் வழங்க வேண்டும்
கடலூர்:
தமிழ்நாடு வருவா ய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் 4 ஆண்டுகளாக வெளியிடப்படாமல் உள்ள துணை கலெக்டர் பட்டியலை உடனடியாக வெளியிட வேண்டும். துணை தாசில்தார் உள்ளிட்ட பதவி உயர்வு பட்டியல் திருத்தத்தின் காரணமாக பதவி இறக்கம் பெரும் அலுவலர்களின் பதவி உயர்வு பாதுகாப்பிற்கான ஆணைகள் விரைவில் வழங்க வேண்டும்.
அலுவலக உதவியாளர் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். இளநிலை வருவாய் ஆய்வாளர் மற்றும் முதுநிலை வருவாய் ஆய்வாளர் பதவி பெயர் மாற்ற அரசாணையை வெளியிட வேண்டும். அரசு டன்பேச்சுவார்த்தையில் ஏற்கப்பட்ட அனைத்து கோரிக்கைகளின் மீது உரிய ஆணைகள் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரி க்கைகளை வலியுறுத்தி நேற்று மாலை கடலூர் மாவட்டத் தலைவர் மகேஷ் தலைமையில் ஒரு மணி நேரம் தாசில்தார் முதல் அலுவலக உதவியாளர் வரை பணிகளை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். பின்னர் கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு மாவட்ட தலைவர் மகேஷ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் ஆறுமுகம் முன்னிலை வகித்தார். துணைத் தலைவர் பூபாலச்சந்திரன் வரவே ற்றார். ஆர்ப்பாட்டத்தில் தாசில்தார் ஸ்ரீதரன், துணை தலைவர் ராஜேஷ் பாபு, மத்திய செயற்குழு உறுப்பினர் ரத்தினகுமரன் ஆகியோர் விளக்கவுரை ஆற்றினார்கள். கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டன. கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் வருகிற 23-ந் தேதி (வியாழக்கிழமை) ஒட்டுமொத்த தற்செயல் விடுப்பு போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முடிவில் வட்ட தலைவர் பார்த்திபன் நன்றி கூறினார்.