கடலூரில் தேசிய அளவிலான சிலம்பம் போட்டிஅமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்
- எம். ஆர். கே. பன்னீர்செல்வம் தலைமை
- 1,200 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்
கடலூர்:
கருணாநிதி நுாற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழ்நாடு அமெச்சூர் சிலம்பம் சங்கம், மாவட்ட அமெச்சூர் சிலம்பம் சங்கம் சார்பில் தேசிய அளவிலான சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டி தொடக்க விழா கடலுாரில் நடைபெற்றது . இப்போட்டியை வேளாண்மை துறை அமைச்சர் எம். ஆர். கே. பன்னீர்செல்வம் தலைமை தாங்கி, தொடங்கி வைத்தார். பின், சில நிமிடங்கள் சிலம்பம் சுற்றினார்.நிகழ்ச்சியில் மாநகர தி.மு.க., செயலாளர் ராஜா முன்னிலை வகித்தார். மாநகர மேயர் சுந்தரி ராஜா, அகில இந்திய சிலம்பம் சம்மேளன பொதுச் செயலாளர் ஐரின் செல்வராஜ், மாவ ட்ட அமெச்சூர் சிலம்பம் சங்க செயலாளர் தட்சணா மூர்த்தி குத்துவிள க்கேற்றினர்.
செயின்ட் ஜோசப் கல்லுாரி செயலர் சுவாமிநாதன், மாவட்ட அமெச்சூர் சிலம்பம் சங்க கவுரவத் தலைவர் வித்யாபதி வாழ்த்துரை ஆற்றினார். விழாவில் தி.மு.க பொதுக்குழு உறுப்பினர் குறிஞ்சிப்பாடி பாலமுருகன், ஒன்றிய செயலாளர் விஜய சுந்தரம், மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் பாலாஜி, தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் கார்த்திக், மண்டல குழு தலைவர் பிரசன்னா, பகுதி துணை செயலாளர், கார் வெங்கடேசன் உடற்கல்வி ஆசிரியர்கள் ராஜமாணிக்கம், அசோகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.போட்டியில், தமிழ்நாடு, அரியானா, ஆந்திரா, மகாராஷ்டிரா, கர்நாடகா, காஷ்மீர் உட்பட 22 மாநிலங்களைச் சேர்ந்த 1,200 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். ஏற்பாடுகளை துணைத் தலைவர் ஆறுமுகம், பயிற்சியாளர் எழிலரசன் செய்திருந்தனர்.