கூடலூரில் மழையால் மரம் முறிந்து போக்குவரத்து பாதிப்பு
- கூடலூர் பகுதியில் கடந்த 10 நாட்களாக மழை பெய்து வருகிறது.
- சாலையில் விழுந்த மூங்கில் தூா்களை அகற்றினர்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் கடந்த 10 நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்றும் கனமழை கொட்டியது. இதில் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன.
கூடலூரில் இருந்து கேரள மாநிலம் வயநாட்டுக்குச் செல்லும் மலைப் பாதையில் நெலாக்கோட்டை கூவச்சோலை பகுதியில் கனமழையால் சாலையின் குறுக்கே மூங்கில் தூா் பெயா்ந்து விழுந்தது. இதனால் அவ்வழியிலான போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது.
தகவலறிந்த கூடலூா் தீயணைப்புத் துறையினா் மீட்பு உபகரணங்களுடன் விரைந்து சென்று நெடுஞ்சாலைத் துறையின் பொக்லைன் உதவியுடன் சாலையில் விழுந்துகிடந்த மூங்கில் தூா்களை அகற்றி போக்குவரத்தை சீரமைத்தனா்.
இதனால், அந்த சாலையில் சுமாா் இரண்டரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்க ப்பட்டது. நீலகிரி மாவ ட்டத்தில் நேற்று காலை நிலவரப்படி அதிகபட்சமாக அவலாஞ்சியில் 144 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது. கூடலூர் - 76, சேரங்கோடு 63, நடுவட்டம் 60, பந்தலூர் 59, ஓவேலி 48, செருமுள்ளி 48, அப்பர் பவானி 48, பாடந்தொரை 42, தேவாலா 42, கிளன்மார்கன் 31, ஊட்டி - 8.4, பாலகொலா 6, கோடநாடு 4, மசினகுடி 4, கேத்தி 4, கல்லட்டி 2.4, குன்னூர் 2 மில்லி மீட்டர் மழை பதிவானது.