உள்ளூர் செய்திகள் (District)

மத்தூர் அருகே உள்ள களர்பதி ஊராட்சியில் நடைபெற்ற இலவச கண் பரிசோதனை முகாமை ஊராட்சி மன்றத் தலைவர் ஜெயந்தி புகழேந்தி தொடக்கி வைக்கின்றார்.

களர்பதி ஊராட்சியில் கண் பரிசோதனை முகாம்

Published On 2022-11-24 10:11 GMT   |   Update On 2022-11-24 10:11 GMT
  • சாமல்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையமும் இணைந்து நடத்தும் இலவச கண் சிகிச்சை பரிசோதனை முகாம் நடைபெற்றது.
  • இம்முகாமை ஊராட்சி மன்ற தலைவர் ஜெயந்தி புகழேந்தி தலைமை வகித்து தொடங்கி வைத்தார்.

மத்தூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் ஒன்றியம், களர்பதி ஊராட்சியும், சாமல்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையமும் இணைந்து நடத்தும் இலவச கண் சிகிச்சை பரிசோதனை முகாம் நடைபெற்றது.

இம்முகாமை ஊராட்சி மன்ற தலைவர் ஜெயந்தி புகழேந்தி தலைமை வகித்து தொடங்கி வைத்தார். முகாமில் கண் மருத்துவர்கள் தமிழரசு, கமலி ஆகியோர் முகாமில் கலந்து கொண்ட நோயாளிகளுக்கு கிட்டபார்வை, தூரப்பர்வை, கண்ணில் நீர்வடிதல், நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு கண் விழி பரிசோதனை செய்தனர்.

கண் சம்பந்தமான பிரச்சனை உள்ள நோயாளிகளை தேர்வு செய்து கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளில் இலவச கண் அறுவை சிகிச்சை செய்து கண் கண்ணாடி, இலவச உணவு மற்றும் மருந்து மாத்திரைகள் ஆகியவை வழங்கி மீண்டும் அரசு செலவில் வீட்டிற்கு அழைத்து வருதல் உள்ளிட்ட ஆலோசனை நோயாளிகளுக்கு வழங்கினர்.

முகாமில் ஊராட்சி மன்றத்துணை தலைவர் தமிழ்செல்வி கருணாநிதி, ஊராட்சி செயலாளர் சரவணன் , வார்டு உறுப்பினர்கள் மற்றும் 100 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு சிகிச்சை பெற்று பயன் அடைந்தனர்.

Tags:    

Similar News