உள்ளூர் செய்திகள்

காரிமங்கலத்தில் உள்ள மலைக்கோவில் வளாகத்தில் தீவிர துப்புரவு பணி

Published On 2022-08-21 08:53 GMT   |   Update On 2022-08-21 08:53 GMT
  • இரு புறங்களிலும் உள்ள செடி, கொடிகள் மற்றும் முட்கள் அகற்றப்பட்டது.
  • தொடர்ந்து மலை அடிவாரத்தில் உள்ள குடியிருப்பு பகுதிகள் ஆகியவற்றில் குப்பைகள் அகற்றப்பட்டு தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது.

காரிமங்கலம்,

தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் தேர்வுநிலை பேரூராட்சி சார்பில் எனது குப்பை எனது கிராமம் என்ற தமிழக முதல்வர் அறிவித்த திட்டத்தின் கீழ் காரிமங்கலம் பேரூராட்சியில் தொடர்ந்து பல்வேறு வார்டுகளில் தீவிர துப்புரவு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக காரிமங்கலம் அருணேஸ்வரர் மலைக்கோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தீவிர துப்புரவு பணி மேற்கொள்ளப்பட்டது.

இதில் டவுன் பஞ்சாயத்து சேர்மன் மனோகரன் தலைமையில் தூய்மை பணியாளர்கள் குப்பைகளை அகற்றி தூய்மைப்படுத்தினர். மேலும் மலைக்கோவில் செல்லும் ரோட்டில் இரு புறங்களிலும் உள்ள செடி, கொடிகள் மற்றும் முட்கள் அகற்றப்பட்டது.

தொடர்ந்து மலை அடிவாரத்தில் உள்ள குடியிருப்பு பகுதிகள் ஆகியவற்றில் குப்பைகள் அகற்றப்பட்டு தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது.

பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தாமல் பேரூராட்சி நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என துண்டுபிரசங்கள் வழங்கி விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. இதில் செயல் அலுவலர் டார்த்தி மற்றும் தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News