கோத்தகிரியில் சாலையில் சுற்றி திரிந்த காட்டெருமை
- பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.
- நகர்புறங்களை நோக்கி படையெடுத்துக் கொண்டு இருக்கிறது.
அரவேணு,
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சமீபகாலமாக வன விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக காட்டெருமைகள் அதிகளவில் நடமாடி வருகின்றன. மேலும் வனவிலங்குகள் அனைத்தும் தற்போது வனப்பகுதியை விட்டு மக்கள் வசிக்கக்கூடிய நகர்புறங்களை நோக்கி படையெடுத்துக் கொண்டு இருக்கிறது. இந்நிலையில் நேற்று மாலை ஜான் ஸ்கொயர் சத்யா பர்னிச்சர் பகுதியில் கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கி செல்லும் சாலையில் காட்டெருமை ஒன்று உலா வந்தது. இதனால் அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் பெரும் அச்சத்துடன் சென்றனர்.இதுபோன்று காட்டெருமைகள் அடிக்கடி இப்பகுதிக்கு வருவதால் பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. காட்டெருமைகளின் நடமாட்டம் நாளுக்குநாள் அதிகரித்து வருவதால் இவற்றின் நடமாட்டத்தை முற்றிலுமாக கட்டுப்படுத்த வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.