உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரியில் 300 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா

Published On 2022-11-15 10:24 GMT   |   Update On 2022-11-15 10:24 GMT
  • 300 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடந்தது.
  • நகாராட்சி தலைவர் பரிதா நவாப் கர்ப்பிணிகளுக்கு சந்தனம், குங்குமமிட்டு, பூ வழங்கி வாழ்த்தினார்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில், 300 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடந்தது.

தற்கு கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ., கிருஷ்ணகிரி நகராட்சி தலைவர் பரிதா நவாப் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஜெயந்தி அனைவரையும் வரவேற்றார்.

கிருஷ்ணகிரி வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஜோதி லட்சுமி, மற்றும் தெய்வமணி, தனம், அமிர்தா, ஜெயலட்சுமி உள்ளிட்ட அலுவலர்கள் கர்ப்பிணிகளுக்கு அறிவுரை வழங்கி பேசினர். பின்னர் கர்ப்பிணிகளுக்கு புடவை, பூ, பழம், மஞ்சள், குங்குமம் அடங்கிய சீர்வரிசையை மதியழகன் எம்.எல்.ஏ., வழங்கி வாழ்த்தினார். கிருஷ்ணகிரி நகாராட்சி தலைவர் பரிதா நவாப் கர்ப்பிணிகளுக்கு சந்தனம், குங்குமமிட்டு, பூ வழங்கி வாழ்த்தினார்.

இதில் தி.மு.க., மாவட்ட அவை தலைவர் தட்ரஹள்ளி நாகராஜ், கிருஷ்ணகிரி நகர செயலாளர் நவாப், நகராட்சி துணை தலைவர் சாவித்திரி கடலரசு மூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர் அஸ்லம், கவுன்சிலர் பாலாஜி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News