குறிஞ்சிப்பாடி பகுதிகளில் புதிய ரேஷன் கடைகள்: அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் திறந்து வைத்தார்
- புதியதாக அங்கன்வாடி மையத்தை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் திறந்து வைத்தார்.
- கலெக்டர் அருண் தம்புராஜ் முன்னிலை வகித்தார்.
கடலூர்:
குறிஞ்சிப்பாடி சட்டமன்ற மேம்பாட்டு நிதியிலிருந்து கடலூர் பச்சையாங்குப்பம் ஊராட்சி சொத்திக்குப்பம், காரைக்காடு, அன்னவல்லி, சாத்தங்குப்பம் ஆகிய பகுதிகளில் ரூ.56 லட்சம் மதிப்பீட்டில் ரேஷன் கடை, குடிகாடு, புதுக்குப்பம், ஆண்டிக்குப்பம் பகுதியில் புதிய பகுதி நேர ரேஷன் கடை, பெரியகாரைக்காடு கிராமத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி நிதியின் கீழ் ரூ.13.57 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக அங்கன்வாடி மையத்தை வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் திறந்து வைத்தார்.
புதுக்குப்பம் பகுதியில் கடலூர்- ராமாபுரம் ( வழி கண்ணாரப்பேட்டை, வழி சோதனைப்பாளையம்) வரை இயங்கி வந்த அரசு பஸ் சேவையை, புதுக்குப்பம் வரை நீட்டிக்கப்பட்ட வழித்தடத்திலான பஸ் சேவையை அமைச்சர் எம்.ஆர். கே.பன்னீர்செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தார் . பின்னர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் கீழ் 14 மகளிர் சுய உதவிக் குழுக்களில் மொத்தம் 176 நபர்களுக்கு ரூ.91 லட்சத்து 24 ஆயிரம் மதிப்பீட்டில் கடன் உதவிக்கான காசோலை களை வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் வழங்கினார். இதில் கலெக்டர் அருண் தம்புராஜ் முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம், கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) மதுபாலன், , கூட்டுறவு இணை பதிவாளர் நந்தகுமார், ஒன்றிய தி.மு.க செயலாளர்கள் காசிராஜன், சுப்பிரமணியன், விஜயசுந்தரம், மாநகர தி.மு.க செயலாளர் ராஜா மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.