நாகையில், தொடர்மழையால் 5000 ஏக்கர் நெற்பயிர்கள் சேதம்
- சுமார் 5ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
- சேதமடைந்த சம்பா பயிர்கள் அழுகி துர்நாற்றம் வீசி வருகிறது.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக நாகப்பட்டினம் மாவட்டம் வடுகச்சேரி, ஆலங்குடி, மூங்கில்குடி, செம்பியன்மகாதேவி, இருக்கை, மகாதானம் சுக்கானூர் உள்ளிட்ட இடங்களில் சுமார் 5ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் சம்பா சாகுபடி செய்யப்ப ட்டுள்ளது.
கடந்த 4 நாட்களாக பெய்த தொடர் கன மழையால் வயல்களை மழைநீர் சூழ்ந்தது. நடவு செய்யப்பட்டு அறுவடைக்கு 10 தினங்களில் தயாராக இருந்த 5000 ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி நெல் மணிகள் முளைத்து சேதமடைந்துள்ளது.
சேதமடைந்த சம்பா பயிர்கள் அழுகி துர்நாற்றம் வீசி வருகிறது.
இதுவரை வேளாண் துறை அதிகாரிகள் பார்வையிடவே இல்லை எனவும் உடனடியாக தொடர் மழையால் பாதிக்கப்பட்ட விளைநிலங்களை முறைப்படி கணக்கெடுத்து பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.