நாகையில், குளங்களை தூர்வார பொதுமக்கள் கோரிக்கை
- குளங்கள் கழிவுநீராலும், குப்பைகளாலும் சூழந்து துார்ந்து போகும் நிலையில் உள்ளது.
- வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரையாக செல்பவர்கள் இந்த குளங்களில் நீராடி செல்வார்கள்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம் மஞ்சக்கொல்லை ஊரா ட்சிக்கு உட்பட்ட புத்துார் கிராமம் உள்ளது.
இந்த கிராமத்தில் 1000-த்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இப்பகுதி மக்கள் பயன்படுத்தும் வகையில் இங்கு சிவன்கோயில் தெரு குளம், அய்யனார்குளம், தாமரைக்குளம் ஆகிய 3 குளங்கள் உள்ளது.
இந்த குளங்கள் தற்போது கழிவுநீராலும், குப்பைகள், கருவேல மரங்கள் சூழந்து துார்ந்து போகும் நிலையில் உள்ளது.
மேலும் தேங்கி உள்ள தண்ணீரால் துர்நாற்றம் வீசி வருகிறது. இதிலிருந்து விஷ பூச்சிகள் அப்பகுதியில் உள்ள குழந்தைகளை கடிப்பதால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு வரை குளத்தை மக்கள் பயன்படுத்தி வந்தனர்.
வேளாங்கண்ணிக்கு பாதை யாத்திரையாக செல்பவர்கள் இந்த குளங்களில் குளித்துவிட்டு செல்வார்கள்.
தற்போது இந்த குளங்கள் தூர்வாரப்படாததால் அதில் தேங்கியுள்ள நீர் அசுத்தமாகி நோய்த்தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
எனவே மாவட்ட நிர்வாகம் குளத்தை துா ர்வாரி மக்கள் பயன்பா ட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.