உள்ளூர் செய்திகள்

மாநாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில பொதுச்செயலாளர் பாலகிருஷ்ணன் பேசினார்.

நாகையில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநாடு

Published On 2022-09-18 09:47 GMT   |   Update On 2022-09-18 09:47 GMT
  • விவசாயிகள் மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்ப பெற வைத்து தோற்கடித்துள்ளனர்.
  • இது போன்ற கருத்து தெரிவித்தால் நாட்டை பிரிவினைவாதத்திற்கு கொண்டு சேர்க்கும் என்றார்.

நாகப்பட்டினம்:

நாகையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் 30 -வது மாநில மாநாடு நேற்று தொடங்கப்பட்டது. நாளை வரை இந்த மாநாடு நடைபெறுகிறது. மாநாடு தொடக்க நிகழ்ச்சியாக நாகப்பட்டினம் புத்தூரில் இருந்து நாகை அவுரிதிடல் வரை பேரணி நடைபெற்றது. அதனை தொடர்ந்து மாநாடு விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இதில் அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அசோக் தாவ்லே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் பொது செயலாளர் ஹன்னன் முல்லா மற்றும் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் பல்லாயிரம் கணக்கான விவசாயிகள் கலந்துக் கொண்டனர்.கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் பேசும்போது:-

பொதுக் கூட்டங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பேசும் மோடி, நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் கேள்விக்கு பதிலும் அளிப்பதில்லை. நாடாளுமன்றத் தேர்தல், சட்டமன்ற தேர்தலில் தோற்கடிக்க முடியாத மோடியை விவசாயிகள் மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்ப பெற வைத்து தோற்கடித்துள்ளனர். இந்தியாவின் ஆட்சி மொழி இந்தியாக இருக்க வேண்டுமென அமித்ஷா தெரிவிக்கிறார். பல கலாச்சாரம் உள்ள நாட்டில் இது போன்ற கருத்து தெரிவித்தால் நாட்டை பிரிவினைவாதத்திற்கு கொண்டு சேர்க்கும் என்றார்.

Tags:    

Similar News