ஒரத்தநாட்டில், நாளை எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்- கலெக்டர் தகவல்
- சிலிண்டர் பதிவு செய்வதில் உள்ள சிரமங்கள், காலதாமதம் போன்ற புகார்களுக்கு நடவடிக்கை.
- எரிவாயு இணைப்பு பெற்றுள்ள நுகர்வோர் தங்களது குறைகளை மனுக்கள் மூலமும், நேரிலும் தெரிவிக்கலாம்
தஞ்சாவூர்:
தஞ்சைமாவட்ட கலெக்டர் தினேஷ்பொ ன்ராஜ் ஆலிவர் வெளியி ட்டுள்ள செய்திகுறி ப்பில் கூறியிருப்ப தாவது:-
ஒரத்தநாடு வட்ட த்தில் எரிவாயு இணைப்பு பெற்றுள்ள நுகர்வோர்களின் குறைகளை தீர்க்கும் வகையில் எரிவாயு இணைப்பு பெற்றுள்ள நுகர்வோர் குறைதீர் கூட்டம் நாளை (செவ்வாய்கிழமை) முற்பகல் 11.30 மணிக்கு ஒரத்தநாடு வட்டாட்சியர் அலுவலகத்தில் தஞ்சாவூர் கூடுதல் கலெக்டர் தலைமையில் நடைபெற உள்ளது.
ஒரத்தநாடு வட்டத்தில் உள்ள எரிவாயுஇணைப்பு பெற்றுள்ள நுகர்வோர்க ளுக்கு எரிவாயு சிலிண்டர் பதிவு செய்வதில் உள்ள சிரமங்கள், எரிவாயு சிலிண்டர் வழங்குவதில் காலதாமதம், அரசு மானியம் நுகர்வோர் வங்கி கணக்கில் வரவு வைத்தல் போன்றவற்றிலுள்ள குறை பாடுகள் குறித்து வரப்பெறும் புகார்களை பெற்று உரிய நடவடிக்கைகள் எடுத்து எண்ணெய் நிறுவனங்களின் விதிமுறைகளுக்கு உட்பட்டு எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை சீர்படுத்த இக்குறைதீர் கூட்டம் நடத்தப்பட உள்ளது. எனவே எரிவாயு இணைப்பு பெற்றுள்ள நுகர்வோர் தங்களது குறைகளை மனுக்கள் மூலமும், நேரிலும் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.