உள்ளூர் செய்திகள்

பரமத்திவேலூரில் ரேஷன் அரிசி கடத்திய 4 பேர் கைது

Published On 2022-11-19 09:38 GMT   |   Update On 2022-11-19 09:38 GMT
  • வெட்டுகாட்டுப்புதூரில் சிலர் ரேஷன் அரிசியை கடத்தவதாக வந்த தகவல் கிடைத்தது.
  • குற்றபுலணாய்வு உதவி ஆய்வாளர் சதீஷ் குமார் தலைமையில் போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர்.

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் அருகே உள்ள வெட்டுகாட்டுப்புதூரில் சிலர் ரேஷன் அரிசியை கடத்தவதாக வந்த தகவலை அடுத்து நாமக்கல் மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்றபுலணாய்வு உதவி ஆய்வாளர் சதீஷ் குமார் தலைமையில் போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது பரமத்தி வேலூர், பழைய பை-பாஸ் சாலையில் உள்ள வெட்டுக்காட்டுப்புதூர் மாரியம்மன் கோயில் பகுதியில் இருந்து வந்த லாரியை மடங்கி விசாரணை செய்தனர். இதில், 15 சாக்கு மூட்டைகளில் 750 கிலோ ரேஷன் அரிசியை கடத்தி வந்தது தெரியவந்தது.

இதையடுத்து ரேஷன் அரிசியை கடத்தி வந்த பரமத்தி அருகே பிராந்தகத்தை சேர்ந்த சங்கர் மகன் மணிகண்டன் ( வயது 39), புதுச்சத்திரம், கல்யாணி பகுதியை சேர்ந்த மருதன் மகன் பழனிவேல் (60), பரமத்திவேலூர் அருகே கோட்டணம்பாளையத்தை சேர்ந்த பெரியசாமி மகன் ராஜேந்திரன்(30), அதே பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் மகன் மணிகண்டன்(23) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய லாரியையும் பறிமுதல் செய்த போலீசார், இதுபற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News