பெரியார் பல்கலைகழக வெள்ளி விழாவில் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு
- அமைச்சர் மற்றும் சட்டப்பேரவை தலைவர் ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.
- பேராசிரிய, பேராசிரியைகள் மற்றும் மாணவர்கள் பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்தனர்.
தருமபுரி,
சேலம் பெரியார் பல்கலைக்கழக வெள்ளி விழாவை முன்னிட்டு பல்வேறு சிறப்பு போட்டிகள் நடத்தப்பட்டன. இதன் ஒரு பகுதியாக பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி மற்றும் கவிதை போட்டி ஆகியவை பெரியார், அண்ணா மற்றும் கருணாநிதி
ஆகிய ஆளுமைகளை மையமாகக் கொண்டு பல்கலைக்கழக வளாகத்தில் நடத்தப்பட்டது .
இதில் தருமபுரி பெரியார் பல்கலைக்கழக பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தின் முதுநிலை இரண்டாம் ஆண்டு கணிதவியல் மாணவி ஸ்ரீ ரஞ்சனி கட்டுரை போட்டியில் முதல் பரிசும், முதுநிலை இரண்டாம் ஆண்டு கணிதவியல் பயிலும் மாணவன் சந்துரு கட்டுரை போட்டியில் இரண்டாம் பரிசு பெற்றனர்.
மேலும் முதுநிலை இரண்டாம் ஆண்டு உயிர் தொழில்நுட்பவியல் பயிலும் மாணவன் தனுஷ் குமார் பேச்சு போட்டியில் இரண்டாம் பரிசு பெற்றார். வெற்றி பெற்ற மாணாக்கர்களுக்கு சேலம் பெரியார் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற வெள்ளி விழா நிகழ்வில் உயர் கல்வித்துறை அமைச்சர் மற்றும் சட்டப்பேரவை தலைவர் ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.
பரிசு பெற்ற மாணவ மாணவிகளை பெரியார் பல்கலைக்கழக இயக்குனர் மோகனசுந்தரம், ஆங்கி லத்துறை தலைவருமான கோவிந்தராஜ், துறைத் தலைவர்கள், பேராசிரிய, பேராசிரியைகள் மற்றும் மாணவர்கள் பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்தனர்.