உள்ளூர் செய்திகள் (District)

கண் சிகிச்சை முகாம் நடந்தது.

சிவபுரத்தில், கண் சிகிச்சை முகாம்

Published On 2023-04-01 09:12 GMT   |   Update On 2023-04-01 09:12 GMT
  • பள்ளி மாணவ - மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பயனடைந்தனர்.
  • 50-க்கும் மேற்பட்ட கால்நடைகள் மற்றும் செல்ல பிராணிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

சுவாமிமலை:

கும்பகோணம் அருகே சிவபுரத்தில் சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலைக்கழகம், ஸ்ரீனிவாச ராமானுஜன் மைய நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் சிறப்பு முகாம் நடந்தது.

முகாமை புலத்தலைவர் ராமசாமி தொடங்கி வைத்தார்.

இதில் உழவாரப்பணி, இலவச கண் பரிசோதனை, சித்த மருத்துவ பரிசோதனை முகாம்கள் நடைபெற்றது.

இதன் மூலம் 100-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ - மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பயனடைந்தனர்.

தொடர்ந்து, நடந்த கால்நடை மருத்துவ முகாமில் 50-க்கும் மேற்பட்ட கால்நடைகள் மற்றும் செல்ல பிராணிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

மேலும், இளைஞர்களின் திறன் மேம்பாடு மற்றும் வாழ்வியல் முறை குறித்த கருத்தரங்கில் பேராசிரியர்கள் நரசிம்மன் மற்றும் வீரக்குமார் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

பின்னர், கோவில் வளாகத்தில் 50-க்கும் மேற்பட்ட பூச்செடிகள் நடப்பட்டது.

முகாமில் சிவபுரம் நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் ராஜேந்திரன், சிவபுரம் ஊராட்சி செயலாளர் சங்கர், கோவில் தலைமை அர்ச்சகர் சதீஸ், தாமரைச்செல்வன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முகாமிற்கான ஏற்பாடுகளை பல்கலைக்கழக துணைவேந்தர் வைத்திய சுப்பிரமணியம் வழிகாட்டுதல்படி, நாட்டுநலப்பணி திட்ட அலுவலர்கள் கணேசன், வெங்கடேஷ், ரம்யா ஆகியோர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News