உள்ளூர் செய்திகள் (District)

நகராட்சி ஆணையர் வாசுதேவன்.

சீர்காழியில், போகியன்று பொதுமக்கள் குப்பைகளை கொளுத்தக்கூடாது- நகராட்சி ஆணையர்

Published On 2023-01-10 08:32 GMT   |   Update On 2023-01-10 08:32 GMT
  • மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்துக் கொடுக்க வேண்டும்.
  • 1939 -ன் படி நீதிமன்ற வழக்கு தொடர்வது உடன் அபராதமும் விதிக்கப்படும்.

சீர்காழி:

சீர்காழி நகராட்சி ஆணையர் வாசுதேவன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது :-

சீர்காழி நகரில் உள்ள பொதுமக்கள் தங்கள் வீட்டை சுத்தம் செய்து குப்பைகளை போகிப் பண்டிகை நாளில் கொளுத்தக்கூடாது.

தங்கள் பகுதியில் வரும் தூய்மை பணியாளர்களிடம் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்துக் கொடுக்க வேண்டும்.

வீடுகள் மற்றும் நிறுவனங்கள் மூலம் வெளியேற்றப்படும் குப்பைகளை பொது இடங்களில் கொட்டினால் பொது சுகாதார சட்டம் 1939 -ன் படி நீதிமன்ற வழக்கு தொடர்வது உடன் அபராதமும் விதிக்கப்படும். மேலும் தங்களின் வீடுகள் தேடி வரும் தூய்மை பணியாளர்களிடம் மட்டுமே தர வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News