உள்ளூர் செய்திகள்

 சூளகிரி ஒன்றிய குழு தலைவர் லாவண்யா ஹேமநாத் குப்பை வண்டிக்கான சாவியை ஊராட்சி மன்ற தலைவரிடம் வழங்கிய போது எடுத்த படம்.

சூளகிரியில் குப்பை வண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி

Published On 2023-03-22 10:09 GMT   |   Update On 2023-03-22 10:09 GMT
  • 53 குப்பை எடுக்கும் மின்கல வண்டிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • கூடுதல் கட்டமாக 6 மின்கல வண்டிகளை சூளகிரி ஒன்றிய குழு தலைவர் லாவண்யா ஹேம்நாத் தலைமையில் வழங்கப்பட்டது.

சூளகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஊராட்சி ஒன்றியத்திற்கு 53 குப்பை எடுக்கும் மின்கல வண்டிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதில் முதல் கட்டமாக 6 மின்கல வண்டிகளை சூளகிரி ஒன்றிய குழு தலைவர் லாவண்யா ஹேம்நாத் அவர் தலைமையில் தியாகரசன்னபள்ளி, கோனேரிப்பள்ளி, மருதாண்டபள்ளி, மற்றும் கானலட்டி ஆகிய ஊராட்சி களுக்கு குப்பை எடுக்கும் மின்கல வாகனங்கள் ஊராட்சி மன்ற தலைவரிடம் வழங்கப்பட்டது. பின்னர் ஒன்றிய குழு தலைவர் வாகனத்தை இயக்கி பார்த்தார்.

இந்நிகழ்ச்சியில் ஒன்றிய குழு உறுப்பினர் நாகேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர்(வ.ஊ) கோபாலகிருஷ்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர்(கி.ஊ) விமல் ரவிக்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News