உள்ளூர் செய்திகள்

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சியை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடங்கி வைத்தார்.

தஞ்சையில், சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி- கலெக்டர் தொடங்கி வைத்தார்

Published On 2023-02-15 10:00 GMT   |   Update On 2023-02-15 10:00 GMT
  • மாநிலம் முழுவதும் சாலை விபத்துகளை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
  • போக்குவரத்து விதிமுறைகளை முறையாக கடைப்பிடித்து விபத்தில்லா மாவட்டமாக மாற வேண்டும்.

தஞ்சாவூர்:

தஞ்சாவூர் மாநகராட்சி மைதானத்தில் போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்புத்துறை சார்பில் மாவட்ட நிர்வாகம் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலகம் மூலம் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சியினை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் கூறியதாவது:-

தமிழக முதல்-அமைச்சர் உத்தரவுக்கிணங்க மாநிலம் முழுவதும் சாலை விபத்துகளை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அந்த வகையில் தஞ்சாவூர் மாநகராட்சி மைதானத்தில் போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்புத்துறை சார்பில் மாவட்ட நிர்வாகம் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலகம் மூலம் தஞ்சை வல்லம் செல்வி கிராமிய தெம்மாங்கு ஆடல் பாடல் இன்னிசை குழுவினரின் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் மாவட்டம் நிர்வாகம் சார்பில் சாலை விபத்துகளை குறைத்து உயிரிழப்புகளை தடுக்கும் பொருட்டு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது, சாலையினை விபத்தில்லா பகுதியாக மாற்றுவதற்கு வட்டார போக்குவரத்து துறை, போக்குவரத்து காவல்துறை, நெடுஞ்சாலைத்துறை, மாநகராட்சி, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, 108 ஆம்புலன்ஸ், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் உள்ளிட்ட அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து செயல் திட்டம் வகுத்து வருகிறார். சாலையில் போக்குவரத்து விதிமுறைகளை 100 சதவீதம் அமல்படுத்தப்பட்ட அனைத்து துறைகளும் கூட்டாக செயல்பட உள்ளதாகவும், பொதுமக்கள் போக்குவரத்து விதிமுறைகளை முறையாக கடைப்பிடித்து விபத்தில்லா மாவட்டமாக மாற்றுவதற்கு மாவட்ட நிர்வாகத்திற்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும். என்றும் அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் தஞ்சாவூர் வட்டார போக்குவரத்து அலுவலர் முருகன், ஆய்வாளர் ஆனந்த், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News