உள்ளூர் செய்திகள்
தஞ்சையில், இந்திய ஜனநாயக கட்சி ஆர்ப்பாட்டம்
- குறுவை சாகுபடிக்கு தேவையான உரம், பூச்சிக்கொல்லி மருந்துகள் தட்டுபாடின்றி கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
- அரிசி, தயிர் உள்ளிட்ட அன்றாட பொருட்களுக்கான ஜி.எஸ்.டி வரி விதிப்பை கைவிட வேண்டும்.
தஞ்சாவூர்:
குறுவை பயிர் சாகுபடிக்கு இன்சூரன்ஸ் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். குறுவை சாகுபடிக்கு தேவையான உரம், பூச்சிக்கொல்லி மருந்துகள் தட்டுபாடு இன்றி கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும், ஏழை, எளிய நடுத்தர மக்கள் மற்றும் சிறு குறு தொழில் பாதிக்கின்ற மின் கட்டண உயர்வை கைவிட வேண்டும். அரிசி, தயிர் உள்ளிட்ட அன்றாட பொருட்களுக்கான ஜி.எஸ்.டி வரி விதிப்பை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சை ரயில் நிலையம் முன்பு இன்று இந்திய ஜனநாயக கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதற்கு தஞ்சை மேற்கு மாவட்ட தலைவர் சிமியோன் சேவியர்ராஜ் தலைமை தாங்கினார். பார்க்கவ குல சங்கம் மாவட்ட தலைவர் திருமாறன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.