தஞ்சையில், தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டது
- மரியாதை செலுத்தும் வகையில் இன்று ஒரு நாள் நாடு முழுவதும் அரசு முறை துக்கம் அனுசரிக்கப்படும்.
- தஞ்சை மாநகராட்சி அலுவலகத்திலும் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறந்தன.
தஞ்சாவூர்:
இங்கிலாந்து நாட்டின் ராணி இரண்டாம்எலிசபெத் உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார்.
அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் இன்று ஒரு நாள் நாடு முழுவதும் அரசு முறை துக்கம் அனுசரிக்கப்படும் என்றும், அரசு விழாக்கள் எதுவும் நடைபெறாது என்றும், தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
அதன்படி இன்று நாடு முழுவதும் ராணி எலிசபெத் மறைவுக்கு துக்கம் அனுசரிக்கப்பட்டது.
தஞ்சை கலெக்டர் அலுவல கத்தில் தேசிய க்கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டது.
தஞ்சை ரயில் நிலையம் முன்பு உள்ள 100 அடி உயர கம்பத்திலும் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறந்தன.
தஞ்சை மாநகராட்சி அலுவல கத்திலும் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறந்தன.
இதே போல் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் தேசி யக்கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டது.
மாவட்டத்தில் அரசு விழாக்கள் எதுவும் நடைபெறவில்லை.