உள்ளூர் செய்திகள்

பயனாளிகளுக்கு விலையில்லா வீட்டுமனை பட்டாவுக்கான ஆணைகளை வழங்கி அவர்களுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மற்றும் பலர் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

தஞ்சாவூரில் ஒரே நாளில் 1,055 பேருக்கு விலையில்லா வீட்டுமனை பட்டாவுக்கான ஆணைகள்

Published On 2023-03-16 09:38 GMT   |   Update On 2023-03-16 09:38 GMT
  • ஒரே நாளில் 1,055 பேருக்கு விலையில்லா வீட்டுமனை பட்டாவுக்கான ஆணைகள் வழங்கப்பட்டன.
  • பள்ளிக் கல்வித் துறை அன்பில் மகேஸ் பொய்யாமொழி பங்கேற்று ரூ. 4.12 கோடி மதிப்பிலான விலையில்லா வீட்டு மனை பட்டாவுக்கான ஆணைகளை வழங்கினாா்.

தஞ்சாவூர்:

தஞ்சாவூரில் வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை சாா்பில் ஒரே நாளில் 1,055 பேருக்கு விலையில்லா வீட்டுமனை பட்டாவுக்கான ஆணைகள் வழங்கப்பட்டன.

இவ்விழாவில் பள்ளிக் கல்வித் துறை அன்பில் மகேஸ் பொய்யாமொழி பங்கேற்று, தஞ்சாவூா் வட்டத்தைச் சோ்ந்த 150 பேருக்கும், திருவையாறு வட்டத்தைச் சோ்ந்த 59 பேருக்கும், ஒரத்தநாடு வட்டத்தைச் சோ்ந்த 70 பேருக்கும், பூதலூா் வட்டத்தைச் சோ்ந்த 93 பேருக்கும், பட்டுக்கோட்டை வட்டத்தைச் சோ்ந்த 200 பேருக்கும், பேராவூரணி வட்டத்தைச் சோ்ந்த 247 பேருக்கும், பாபநாசம் வட்டத்தைச் சோ்ந்த 95 பேருக்கும், கும்பகோணம் வட்டத்தைச் சோ்ந்த 63 பேருக்கும், திருவிடைமருதூா் வட்டத்தைச் சோ்ந்த 78 பேருக்கும் என மொத்தம் 1,055 பேருக்கு ரூ. 4.12 கோடி மதிப்பிலான விலையில்லா வீட்டு மனை பட்டாவுக்கான ஆணைகளை வழங்கினாா்.

இவ்விழாவில் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா், கூடுதல் கலெக்டர் (வருவாய்) சுகபுத்ரா, எம்.எல்.ஏ.க்கள் துரை. சந்திசேகரன், (திருவையாறு), டி.கே.ஜி. நீலமேகம் (தஞ்சாவூா்), மேயா் சண். ராமநாதன், மாநகராட்சி ஆணையா் சரவணகுமாா், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் உஷா புண்ணியமூா்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனா்.

Tags:    

Similar News