தஞ்சையில், மாபெரும் கையெழுத்து இயக்கம்
- நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி மாபெரும் கையெழுத்து இயக்கம்.
- இன்று காலை சென்னையில் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
தஞ்சாவூர்:
நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி தி.மு.க. மருத்துவர் அணி, இளைஞரணி சார்பில் மாபெரும் கையெழுத்து இயக்கத்தை இன்று சென்னையில் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
அதன்படி தஞ்சையில் தி.மு.க. மருத்துவர் அணி, இளைஞரணி சார்பில் மாபெரும் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதில் மத்திய மாவட்ட செயலாளர் துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ., தலைமை செயற்குழு உறுப்பினர் டி.கே.ஜி.நீலமேகம் எம்.எல்.ஏ, மாநகர செயலாளரும் மேயருமான சண்.ராமநாதன், மருத்துவர் அணி அமைப்பாளரும் துணை மேயருமான அஞ்சுகம் பூபதி, மாநில மகளிர் ஆணைய தலைவி குமாரி, மாவட்ட பொருளாளர் அண்ணா, ஒன்றிய செயலாளர்கள் முரசொலி, செல்வகுமார், மாவட்ட துணை செயலாளர் கனகவள்ளி பாலாஜி, முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் து .செல்வம், முன்னாள் நகர்மன்ற தலைவர் இறைவன், கவுன்சிலர் மேத்தா மற்றும் பலர் கலந்து கொண்டு நீட் தேர்வுக்கு எதிராக கையெழுத்து போட்டனர். மேலும் பொதுமக்கள், இளைஞர்கள் கையெழுத்து போட்டனர்.