உள்ளூர் செய்திகள்

மருத்துவ முகாமை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடங்கி வைத்தார்.

தஞ்சையில், சிறப்பு மருத்துவ முகாம்- கலெக்டர் தொடங்கி வைத்தார்

Published On 2023-04-08 09:45 GMT   |   Update On 2023-04-08 09:45 GMT
  • பல்வேறு வகையான பரிசோதனைகள் செய்யப்பட்டு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
  • 10 குழந்தைகள் மற்றும் சில பெண்களுக்கு மேல் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

தஞ்சாவூர்:

இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி மற்றும் இந்திய மருத்துவ சங்கம் சார்பில் இன்று உலக சுகாதார தினத்தை முன்னிட்டு தஞ்சாவூர் ராஜப்பா நகரில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

இம்முகா மினை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடங்கி வைத்தார்.

இந்த மருத்துவ முகாமில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த டாக்டர்கள் செல்வ வேல், கார்த்திகேயன், ராதிகா மைக்கேல், சிங்காரவேலு, மணிராம் கிருஷ்ணா, உஷா நந்தினி, அமுத வடிவு, ராஜ்மோகன், ரேகா ராஜமோகன், மணிமாறன், விக்ரம் குமார், பாரதி, ராஜசேகர், லியோ ஜோசப், சிஜூ ஜோசப், கௌதம், விஜயபாஸ்கர், சத்யநாராயணன் ஆகியோர் கலந்து கொண்டு 200-க்கும் மேற்பட்ட கட்டிட தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்தனர். இலவசமாக மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டன.

மேலும் பல்வேறு வகையான பரிசோத னைகள் செய்யப்பட்டு ஆலோ சனைகள் வழங்கப்பட்டன.

இதில் 10 குழந்தைகள் மற்றும் சில பெண்களுக்கு மேல் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

முன்னதாக உலக சுகாதார தினத்தை முன்னிட்டு "அனைவருக்கும் சுகாதாரம்" என்பதை வலியுறுத்தி இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி சார்பில் பயனாளிகளுக்கு சுகாதார பெட்டகத்தை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வழங்கினார்.

நிகழ்ச்சியில் இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி சுகாதார நலன் ஆலோசகர் டாக்டர் சிங்காரவேலு வரவேற்றார்.

இந்திய மருத்துவ சங்க தலைவர் டாக்டர் லியோ ஜோசப் மற்றும் இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி இரத்த வங்கி ஆலோசகர் டாக்டர் ராதிகா மைக்கேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி துணை சேர்மன் பொறியாளர் முத்துக்குமார் நன்றி கூறினார்.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி பொருளாளர் ஷேக்நாசர், யூத் ரெட்கிராஸ் ஆலோசகர் ஜெயக்குமார், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முருகானந்தம், ஜூனியர் ரெட்கிராஸ் ஆலோசகர் பிரகதீஷ் , இந்திய மருத்துவ சங்க செயலாளர் டாக்டர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News